ஐந்து மாதங்களில் ஒரு மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. அதன்படி, மே மாதம் 25 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,006,097 ஆக பதிவாகியுள்ளதாக அந்த அதிகார சபை கூறியுள்ளது. மேலும், மே மாதத்தில் மே 25 வரை மேலும் 109,213 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அந்த […]

உறங்காத கொழும்பு’ அரசாங்கத்தின் புதிய திட்டம்

இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு’ (Marine Nights: Awakening Colombo) தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காலி […]

நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் – யாழ். மாநகர சபையினருக்கு பெருவிழா பட்டோலை கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (27) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குபிள்ளையால் கையளிக்கப்பட்டது. […]

கப்பல் மூழ்கி விபத்து; இந்திய கடற் பகுதியில் அவசரகால நிலை!

இந்தியாவின் தெற்கு கேரள மாநிலத்தில், எண்ணெய் மற்றும் அபாயகரமான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அரபிக் கடலில் கசிந்து மூழ்கியதை அடுத்து, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (25) கொச்சி நகருக்கு அருகே கவிழ்ந்த லைபீரியக் கொடியுடன் கூடிய கப்பலில் கசிவு ஏற்பட்டது. கடலோரப் பகுதி பல்லுயிர் பெருக்கத்தால் நிறைந்ததாகவும், ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலின் 640 கொள்கலன்களில் சில கரையை நோக்கி நகர்ந்து […]

ஆசியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக இடம்பிடித்த யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் முன்ணணி சஞ்சிகையின் தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் நூறு பேரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல் ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகளின் ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் […]

நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் – த.வெ.க. தலைவர் விஜய்

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் குறித்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என தனது வணக்கத்தை பதிவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் யாழ் வரணி பகுதியில் உயிரிழப்பு.

வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , வரணி வடக்கு பகுதியில் குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது , அப்பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி வயது 19 என்ற இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் , சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .