அடுத்த இரண்டு பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு உரம் இலவசம்.

ஜூலை 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராம வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய வாரமொன்று அறிவிக்கப்படவுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் […]
வெறும் கண்களுக்குத் தெரியக் கூடிய புதிய நட்சத்திரம்?

பூமியில் இருந்து 3000 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள T Coronae Borealis என்ற இரட்டை நட்சத்திரத் தொகுதியில் மிகப் பெரிய சிவப்புக் குள்ளன் (Red Dwarf) நட்சத்திரத்தினால் அருகே இருக்கும் வெள்ளைக் குள்ளன் நட்சத்திரம் (White Dwarf) ஈர்க்கப் படும் Nova outburst என்ற நிகழ்வின் காரணமாக பூமியில் இருந்து பார்க்கும் மனிதனின் வெறும் கண்களுக்கு துருவ நட்சத்திரமான சிரியஸ் இற்கு இணையான பிரகாசம் கொண்ட புது நட்சத்திரம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜொலிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. […]
யாழில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள்…

யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை (27) முற்றாக எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உடுவில் தெற்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்த நிலையில் காணப்படுவதாக, சுன்னாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்க தகடு என நம்பப்படும் இலக்க தகடு ஒன்று காணியின் பிறிதொரு இடத்தில் […]
இலங்கையின் இன்றைய தங்க விலை.

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (27) 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 191,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,200 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 177,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்கான சிறுமி உயிரிழப்பு

கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் விசர்நாய்க் கடிக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளார். சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
இலங்கை பொது மலசலகூடத்தில் இரு சடலங்கள் மீட்பு.

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும், இன்று வியாழக்கிழமை (27) ஆரியபுர பொகவந்தலாவையைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மலசல கூடத்தில் இருவர் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் குறித்த […]
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது உறுதி!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது” இதுவரை காலமும் கொள்கை ரீதியாக பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பில் நிறுத்துவது என்று இருந்த விடயம் இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொது […]