3 உணவகங்களுக்கு எதிராக வழக்கு

சுகாதார விதிமுறைகளை மீறி ஹப்புத்தளை பகுதியில் இயங்கி வந்த மூன்று உணவகங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இன்றைய தினம் திடீர் சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். அத்துடன், மேலும் 16 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! […]

தேங்காய் எண்ணெயுடன் பாம் எண்ணெய் கலப்படம்?

தேங்காய் எண்ணெயுடன் பாம் எண்ணெயை கலப்படம் செய்து பல வர்த்தகர்கள் மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. பாம் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை குறைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் முயற்சிப்பதாக தலைவரான ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது கடமைகளை மேற்கொள்ளும் போது வர்த்தகர்களை பற்றி சிந்திக்காமல் மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேங்காய் எண்ணெயுடன் பாம் எண்ணெய் கலக்கப்படுவதால் பெரும்பாலான நுகர்வோர் […]

6 இலட்சம் சீமெந்து மூடைகள் இறக்குமதி

எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பிறகு சீமெந்து தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளதாக சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 6 இலட்சம் சீமெந்து மூடைகளை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் நேற்று (19) நாட்டை வந்தடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்தோனேசியாவிலிருந்து ஒரு கப்பல் 200,000 சீமெந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்ததுடன் பாகிஸ் தானிலிருந்து 400,000 சீமெந்து மூடைகளை ஏற்றிக் கொண்டு மற்றொரு கப்பல் வந்துள்ளது. குறித்த சீமெந்து மூடைகள் விரைவில் சந்தைக்கு விடப்படும் எனவும் சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் […]

இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயத்தை கடத்த முயன்ற ஐவர் கைது

42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை துபாய்க்கு கடத்த முயன்ற 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விமான நிலைய சுங்கப்பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த வெளிநாட்டு நாணயம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த தொகை டுபாய்க்கு கடத்தப்படவிருந்ததாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக […]

பால் உற்பத்தியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு

ஒரு லீட்டர் பசும் பாலுக்காக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு பெப்ரவரி முதலாம் திகதி முதல் மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பால்மா உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. ⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் […]

5,000 ரூபா கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு இல்லை!

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள மாதாந்த மேலதிக கொடுப்பனவான 5,000 ரூபாவை ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை வலயக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு 2022 ஜனவரி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற கணக்காளர்கள் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேலதிக கொடுப்பனவு, ஆசிரியர் கொடுப்பனவு பட்டியலில் காட்டப்பட்டுள்ள போதிலும், அது கொடுப்பனவுடன் […]

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய 2 கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தன

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் இருந்து மின் உற்பத்திக்காக 10,000 மெற்றிக் தொன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதனடிப்படையில் 8 நாட்களுக்கு போதுமான டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். ⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் […]