டிரெண்டிங்கில் முத்த மழை பாடல்.

தக் லைப் திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 3 ஆவது நாளாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்திய திரையிசை நட்சத்திரங்களில் தனித்துவமாக ஒளிரும் ‘இசை புயல்’ ஏ. ஆர் .ரஹ்மான் இசையில் உருவான தக் லைப் எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடைபெற்ற, இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடலின் வீடியோ 3 மில்லியன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்பாடலில் ஒரிஜினல் […]

மகிந்த கால அமைச்சர்களுக்கு அநுரா ஆட்சி தண்டனை..

ஆகெரம்போர்ட் கொடுக்கல் வாங்கல் முறைகேட்டில் குற்றவாளிகளாக ஆஅடையாளங்காணப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த ஆஅளுத்கமகேவுக்கு 20 வருட கடூழிஅய சிறைத்தண்டனையும், முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோவுக்கு 25 வருட கடூழியசிறைத்தண்டனையும் வழங்கி கொழும்பு மவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது . அரசாங்கத்திற்கு ரூ.53 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேஅரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியனுக்கும் அதிகமான […]

தப்புமா பங்குச்சந்தை?

Nvidia நிறுவனத்தின் AI சிப் விற்பனை குறித்த முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், பங்குச்சந்தைகளில் ஒரு பெரும் பதற்றம் நிலவுகிறது. ஒட்டுமொத்த குறைக்கடத்தி (semiconductor) துறைக்கும் இந்த அறிக்கை பெரும் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. VanEck Semiconductor ETF (SMH.O) எனும் மிகப்பெரிய குறைக்கடத்தி ETF-ல், கடந்த 10 நாட்களில், ஒவ்வொரு கால் (call) ஆப்ஷன்களுக்கும் எதிராக சுமார் 2.4 புட் (put) ஆப்ஷன்கள் கைமாறியுள்ளன. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு […]

பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பலர் அஞ்சலி

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் பூதவுடல் இன்றைய தினம் புதன்கிழமை காலை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அஞ்சலி செலுத்தினர். வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை […]

கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதம

கனடாவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், சேதமாக்கப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரம்டன் நகரில் அண்மையில் தமிழின அழிப்பு நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதற்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவைத் தேர்தலில் கமலுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூடவே ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் மநீமவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் திகதி தேர்தல் […]

மோசமடையும் வானிலை – சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கை நாளை வரை நடைமுறையில் இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் […]