அரிசி இறக்குமதிக்கு 11 பில்லியன் ரூபா செலவீடு!

நாட்டில் அந்திய செலாவணியை திரட்டிக் கொள்வதில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் 11 பில்லியன் (1,100 கோடி) ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது. சுங்க திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய 122, 217 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அரிசி இறக்குமதிக்காக 7.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனினும் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் கடந்த ஆண்டை விடவும் அரிசி இறக்குமதிக்காக அதிக […]

இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன்

அத்தியாவசியமான பொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து இலங்கை மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடன் எல்லை வசதியை (Credit Line) கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக இரண்டு முக்கிய தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாக்கப்பட்டுள்ளது. 2020 ஜனவரியில் இருந்து இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 70% குறைந்துள்ளது. இதனால் அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருள் […]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ரூபா

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 ரூபா வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி […]

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறந்து வைப்பு!

இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் 01.00 மணியளவில் காணொளி முறையில் எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்திய தூதுவர் […]

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்று (28) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷயைச் சந்தித்தார். கொழும்பில் இன்று தொடங்கும் ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திரு.ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார். ஜெய்சங்கரின் வருகை தொடர்பில் மகிழ்ச்சியை தெரிவித்த ஜனாதிபதி, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். […]

பேரீச்சம் பழத்துக்கான வரி குறைப்பு

எதிர்வரும் ரமழான் நோன்பை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்துக்கான வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழம் ஒரு கிலாே கிராமுக்காக தற்போது நடைமுறையில் இருக்கும் 200 ரூபா விசேட சந்தைப்பொருள் வரியில் ஒரு கிலாே கிராமுக்கு ஒரு ரூபாய் மாத்திரம் அறவிடும் வகையில் குறித்த வரி 199 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் 2022 மார்ச் மாதம் 28ஆம் திகதி ஆகிய […]

22022 ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகளின் இலக்கு

2022 ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே வேளையில், உலகளாவிய ஊக்குவிப்பு, திறன் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் சுற்றுலா ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அடையவும், ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர்களை இத்துறையில் இருந்து சம்பாதிக்கவும் நாடு இலக்கு வைத்துள்ளது. தடைகள் களையப்பட வேண்டும் என்றும், உலகளாவிய […]