உலகின் சிறந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் – இலங்கை 105 இருந்து 95 வது இடத்தில்!

அக்டோபர் 2024 இல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, சிங்கப்பூர் மீண்டும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக பெயரிடப்பட்டுள்ளது, அதன் குடிமக்களுக்கு 195 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகியவை இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன, சமீபத்திய தரவரிசையின்படி 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகின்றன. அமெரிக்கா 8வது இடத்தைப் பிடித்தது, அதன் குடிமக்களுக்கு 186 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு வழங்குகிறது. இதற்கிடையில், […]
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அதே விறுவிறுப்புடன் கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார். திரையுலகை தாண்டி, அரசியலுக்கு வந்துள்ள விஜய் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு கண்டிப்புடன் விஜய் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த செயற்குழு கூட்டத்திலும் விஜய் இதை கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கிறார். அரசியல் கட்சி தலைவர்களை மட்டுமல்ல, திரையுலகில் முன்னணியில் […]
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

மேல், தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக […]
கொழும்பு: சற்று குறைந்த தங்கத்தின் விலை!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) சற்று குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 218,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,000 ரூபாவாகவும் உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 219,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,500 ரூபாவாகவும் […]
இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்யை தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்யை தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) குறைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 288.67 ரூபாவாகவும், 297.72 ரூபாவாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 288.55 ரூபாவாகவும், 297.60 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேநேரம், […]
கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான இணையவழி முறைமை.

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யக்கூடிய இணையவழி முறைமையொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அருகே மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது. நேற்றைய தினம் விடுமுறை நாளாக இருந்த போதிலும் மக்களின் வரிசை காணப்பட்டுள்ளது.. இன்றைய தினம் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பத்தரமுல்லை […]
சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நேற்று திரையரங்கில் வெளியான படம் ‘அமரன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியானது. தொடர்ந்து, பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளை இப்படம் பெற்று வருகிறது. இப்படம் […]