இலங்கையில் பல பகுதிகளில் மழை!

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் செல்வாக்கின் கீழ், இன்றும் (13) அடுத்த சில நாட்களிலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக உள்ளது. வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும். பிற இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில […]
யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலவரம்!

நாடாளுமன்றத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட […]
2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய அப்டேட்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ளது. தேர்தலில் மொத்தம் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையோர் ஆவார். நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர் அட்டை பெறாமல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பின்வரும் ஆவணங்கள் அதற்கு பொருந்தும்: தேர்தல் பாதுகாப்பு […]
உலக நாயகன் பட்டத்தை துறந்த கமல் ஹாசன்!

தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் கமல் ஹசான், ‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறக்கும் அறிவிப்பினை திடீரென வெளியிட்டுள்ளார். மேலும், தன்னை இனி ‘கமல்ஹாசன்’ அல்லது ‘KH’ என்று அழைத்தாலே போதும் என்று சினிமாத் துறையினர், ஊடகவியலாளர்கள், கட்சியினர், அரசியல்வாதிகள், இந்திய மக்கள் என அனைவருக்கும் வேண்டுகோளும் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் […]
கொழும்பு, தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகவும் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 212,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 195,500 ரூபாவாகவும் உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 213,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 197,000 […]
நாடாளுமன்ற தேர்தல்; வாக்கு எண்ணும் முறை பற்றிய தெளிவூட்டல்!

எதிர்வரும் நவம்பர் 14 வியாழன் அன்று நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணுவதற்கான செயல்முறையினை தேர்தல்கள் ஆணைக்குழு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் நவம்பர் 14 ஆம் திகதி மாலை 04.15 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார். வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்துக்கு வருவதை அடிப்படையாகக் கொண்டு, வழக்கமான வாக்கு எண்ணும் பணிகள் அன்றைய […]
மின் கட்டண குறைப்பு தொடர்பில் புதிய தகவல்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் முன்னதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பிரேரணையை மீளாய்வு செய்து கடந்த 8ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. இதற்கு இரண்டு வார கால […]