இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 430 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 445 ரூபா 62 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 371 ரூபா 53 சதம் சுவிஸ் பிராங் […]
கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நாளொன்றிற்கு சுமார் 4,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 1,300 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளதாக அந்தச் சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதனால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில், வீதி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மருந்துக் கொள்வனவுக்கு கடனுதவி!

உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 30 மில்லி யன் அமெரிக்க டொலரை வழங்க முன்வந் துள்ளன. பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 6 வகை யான மருந்துகள் கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாட்டில் இன்னும் 42 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் […]
சீமெந்து மூடை ஒன்றின் விலை 600 ரூபாவால் அதிகரிப்பு!

அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு சீமெந்து விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தற்போது 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ரூ.2300 – 2350 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால், சீமெந்தின் புதிய விலையை ரூ.500 – 600 ரூபாவால் உயர்த்த சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சீமெந்து விலை உயர்ந்துள்ளதாலும், புதிய கட்டிடங்களின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாலும் சீமெந்தின் தேவை குறைந்துள்ளதாகவும், இதனால் மொத்த […]
சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள்

தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க, சீன வெளிவிவகார அமைச்சும், சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் தீர்மானித்துள்ளன. இந்த உதவிகளை சீன வெளிவிவகார அமைச்சும் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் ஒன்றிணைந்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை அறிவித்துள்ளது. #Chinese Foreign Ministry @MFA_China & Int'l Development Cooperation Agency @cidcaofficial announced that #China will provide […]
மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது!

இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு […]
இன்று 1,400 மெட்ரிக் டன் எரிவாயு விநியோகம்: தேவை அடிப்படையில் முன்னுரிமை

நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட 1,400 மெட்ரிக் டன் எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று (21) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாதம் கோரப்பட்டுள்ள மேலும் இரண்டு எரிவாயு […]