எரிவாயுக் கப்பல் எரிபொருள் இன்மையால் இந்தியா திரும்பியது

லிட்ரோ எரிவாயுவை சந்தைக்கு வெளியிட இன்னும் சில நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. 3500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் இலங்கைக்கு வந்தாலும், கப்பலுக்கு எரிபொருளை வழங்க முடியாததால் இந்தியாவுக்குச் சென்றுள்ளது. கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குத் திரும்புவதற்கும் எரிவாயுவை இறக்குவதற்கும் இன்னும் மூன்று நாட்கள் தாமதமாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் […]

பூகோள பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடையக்கூடும்

பூகோள பொருளாதாரம் எதிர்வரும் சில மாதங்களில் பாரிய வீழ்ச்சியை அடையக்கூடும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது. கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் மோதலால் ஏற்பட்டுள்ள உணவு, எரிசக்தி, பசளை ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார வீழ்ச்சி நிலை ஏற்படக்கூடும் என உலக வங்கியின் தலைவர் David Malpass தெரிவித்துள்ளார். உலகில் பல நாடுகளில் எரிசக்தி விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளமையானது, பொருளாதார வீழ்ச்சியின் முதலாவது வௌிப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ […]

ஜூன் மாதமளவில் சர்வதேச கடன் கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) எதிர்வரும் ஜூன் மாதமளவில் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்று கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். தற்போது இலங்கை 4 வீத பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இணையம் ஊடாகவும் […]

யாழில் வெங்காய செய்கையை தொடர முடியாத நிலை

எரிபொருள், உரப்பற்றாக்குறையால் யாழ். மாவட்டத்தில் சிறுபோக வெங்காய செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் வாழ்வாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். யாழ். மாவட்டத்தில் தற்போது சிறுபோக வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விதை வெங்காயம் ஒரு கிலோ விலை 500 ரூபாவை தாண்டியுள்ள நிலையில், ஒரு மூடை யூரியாவும் 40,000 ரூபா முதல் 45,000 ரூபா வரை விற்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கிருமி நாசினி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பன வெங்காய செய்கையை தொடர முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் […]

உதவிகள் அவசரமாக தேவைப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கை தொடர்பில் தேசிய இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு பாராளுமன்றத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சுற்றுலாத்துறையை முடக்கியுள்ள கொரோனா தொற்றினால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் இது வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து கிடைக்கும் அந்நிய செலாவணியை […]

பொருளாதார நெருக்கடி: நிறைவேற்றத் தவறிய நபர்கள், விசேட பாராளுமன்றக் குழு

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இந்த நிலைக்குச் செல்லத் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்றக் குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் (கோப் குழு) பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரைத்தார். பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் தீர்மானங்கள் காரணமாக முழு நாடும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், இதனைக் குற்றமாகக் கருதி விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோப் குழுவின் […]

வங்கித் தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் அதிவிசேட வழிமுறைகள்

வங்கித் தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் அதிவிசேட வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்துகின்றது. இதன்படி, உரிமம்பெற்ற வங்கிகள் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கான தற்போதைய கால எல்லை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியாக உள்ளது. அதனை, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. […]