யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுகிறது?!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தொடராக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாப் பரவலின் தொடராக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. கொரோனா நெருக்கடி நிலை தீர்ந்து பிசிஆர் பரிசோதனைகள் கூட தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இன்றுவரையில் குறித்த விமான நிலையத்தினை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை. இருந்தபோதிலும் பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் […]

ஜுன் முதலாம் திகதி திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று ஏலவிற்பனையினூடாக 83,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 40,000 மில்லியன் உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 23,000 மில்லியன் உண்டியல்களும், 364 நாட்களில் முதிர்வடையும் 20,000 மில்லியன் உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்பப்படவுள்ளன. அரசாங்கப் பிணையங்களில் உள்ள முதனிலை வணிகர்களிடம் இருந்து விலைக்குறிப்பீடுகள் கோரப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட இலத்திரனியல் விலைக்குறிப்பீட்டு வசதியூடாக மட்டுமே விலைக்குறிப்பீடுகள் […]

பயிர்ச்செய்கைகளில் கிடைக்கும் அறுவடை 50 சதவீதத்தால் வீழ்ச்சி

விவசாயத்துக்கு முன்னுரிமையளித்து, அதற்காக அதிக நிதியை ஒதுக்கி, பாரிய விவசாய வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர்த்து, எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண முடியாது என முன்னாள் விவசாயத்துறை பணிப்பாளர் கே.பி குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களின் நுகர்வுக்கு அவசியமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. எனினும், கடந்த பெரும்போகத்தின்போது, இரசாயண உரம் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, நெல் உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளில் கிடைக்கும் அறுவடை 50 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]

இன்று கையிருப்பில் உள்ள எரிபொருள் விபரம் வெளியானது

கப்பல் ஒன்றிலிருந்து மசகு எண்ணெய் இன்று தரையிறக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், நாளைய தினம், டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை ட்விட்டர் பதிவொன்றில் அவர் வெளியிட்டுள்ளார். இதன்படி, 17,077 மெற்றிக் டன் டீசல், 1,072 மெற்றிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது. 37,391 மெற்றிக் டன் 92 ஒக்டேன் […]

தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீத வளர்ச்சியை பதிவுச் செய்துள்ளது

ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பொருளாதார தளம்பல் நிலை காணப்படுகின்ற போதிலும், ஆடைத் தொழிற்துறை வலுவான நிலையில் உள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் காலாண்டில், ஆடைத் தொழிற்துறையின் வருமானம், 1.5 பில்லியன் டொலர் வரையில் அதிகரித்து, 10.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எவ்வாறிருப்பினும், அந்த வளர்ச்சி வீதத்தில், […]

இலங்கையில் கட்டுமானத் துறையில் 1.2 மில்லியன் பேர் ஒரு மாதத்துக்குள் வேலையின்மையை எதிர்கொள்கின்றனர்

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 75% தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 300,000 தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்கு மறைமுகமாகப் பங்களிக்கின்றனர். இருப்பினும் அடுத்த மாதத்துக்குள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1.2 மில்லியன் மக்கள் வேலையின்மையை எதிர்கொள்வர் என தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம்.டி. போல் குறிப்பிட்டார். தற்போது 90% ஆன கட்டுமானப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். […]

எரிபொருளுக்காக மாதாந்தம் 100 மில்லியன் டொலர் செலவு

00 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை எரிபொருளுக்காக மாதாந்தம் செலவிடப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சராசரியாக அலகொன்றுக்கான உற்பத்தி செலவீனம் 48 ரூபா 2 சதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையை மாற்றுவதற்கு ஏற்ற வகையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புதுப்பிக்கதக்க சக்தி திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலையில், கைத்தொழில், அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள், மற்றும் விருந்தகங்கள் என்பவற்றின் மின்கட்டணங்கள் மூன்று […]