இன்றைய (27) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27.05.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பல மாவட்டங்களில் தாமதம்

பல மாவட்டங்களில் சிறு போகத்திற்கான விதைப்பு மற்றும் நிலத்தை தயார்படுத்தும் பணிகள் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சிறு போகத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் நிறைவடையாவிட்டால், நாடு கடும் உணவு நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி அபேசிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் நெற் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாவிட்டால், அதற்கு பதிலாக வேறு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளார். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 […]
நாட்டில் மோட்டார் வாகன பதிவு பாரிய அளவில் வீழ்ச்சி

நாட்டில் மோட்டார் வாகன பதிவு தற்போது பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமையயே புதிய வாகன பதிவுகள் குறைவடைவதற்கான காரணம் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும், நாட்டில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் பழைய வாகனங்கள் மாத்திரம் இன்னும் பதிவு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டள்ளார். குத்தகை அடிப்படையில் வாகனங்களை கையளிக்கும் போது மோட்டார்; வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானம் கடந்த இரண்டு […]
பெற்றோல் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து, பெற்றோலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது, 20,598 மெட்ரிக் டன் டீசல், 1,778 மெட்ரிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது. 42,750 மெட்ரிக் டன் 92 ரக ஒக்டேன் பெற்றோல், 6,579 மெட்ரிக் டன் 95 ரக ஒக்டேன் பெற்றோல், 3,104 மெட்ரிக் டன் ஜெட் ஏ1 ரக எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ⏰ யாழில் […]
நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து மதிப்பீடு

நாட்டின் கையிருப்பில் உள்ள, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகை குறித்து, கணக்கிடப்பட்டு வருவதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தொகை குறித்து தீர்மானிக்கப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள உணவு நெருக்கடிக்கு தயார்ப்படுத்தல் மற்றும் திட்டமிடல் என்பன குறித்து, ஜனாதிபதியுடன் எதிர்வரும் 2ஆம் திகதி விசேட கலந்துரையாடல் […]
தேவையான உணவுப் பயிர்களை தாமே உற்பத்தி செய்ய வசதி

பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தமது வீடுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யுமாறு விவசாயத் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும் என்றும் விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே […]
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு இல்லை – பிரதமர்

ஊடக செய்திகளுக்கு அமைய, அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கவில்லை என, பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் இடைக்கால பாதீட்டு திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் அதிகரிக்க்கப்பட உள்ளதாக, ஊடகங்களிலும், சமூக வலைத்தங்களிலும் செய்திகள் பரவிவருகின்றன. இந்த நிலையில், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது ⏰ யாழில் […]