மதுபானங்களின் விலைகள் உடன் உயர்வு

இன்று முதல் அமுலாகும் வகையில் 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து […]
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா உதவி

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார். அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு ஐந்து வழி முறையிலான உதவிகளை எடுத்துரைத்தார். கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு […]
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தடைக்கு, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நேற்று முன்தினம் இணங்கியதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 123 டொலராக பதிவாகியுள்ளதென சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களில் இது அதிகபட்ச விலை அதிகரிப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 27 சதவீத எண்ணெய்யையும், 40 சதவீத எரிவாயுவையும் விநியோகிக்கிறது. இந்த நிலையில், ஐரோப்பிய […]
சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்

இன்றைய தினமும் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ […]
800க்கும் அதிக கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

சுங்க அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 800க்கும் அதிகமான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கொள்கலன்கள் தேங்கியுள்ளமையால், துறைமுகத்தில் பாரிய இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த இடங்களில் பயனுள்ள செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் இலங்கை கடல்சார் முகவர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சில கொள்கலன்கள் 10 வருடங்களுக்கு மேலாக துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த […]
இலங்கையின் பணவீக்கம் மே மாதம் உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, இலங்கையின் பணவீக்கம் மே மாதம் 39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 29.8 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது, இந்த மாதம் 39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், கடந்த ஏப்ரல் மாதம் 46.6 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம், இந்த மாதம் 57.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏப்ரலில் 22 சதவீதமாக காணப்பட்ட உணவல்லா பணவீக்கம், இந்த […]
இலங்கையில் வரி அதிகரிப்பு

உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (வற்) 12% ஆக அதிகரிக்கப்படவுள்ளது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15% ஆகவும் அதிகரிக்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக […]