இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 365 ரூபா 28 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 445 ரூபா 19 சதம். விற்பனை பெறுமதி 460 ரூபா 70 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 9 சதம் விற்பனை பெறுமதி 393 ரூபா 95 சதம் சுவிஸ் பிராங் […]
நிலையான வெளிநாட்டு நேரடி வைப்பு எதிர்பார்ப்பபுடன் 5 ஆண்டுக்கான மூலோபாய திட்டம்

இலங்கை முதலீட்டுச் சபை நிலையான வெளிநாட்டு நேரடி வைப்பு எதிர்பார்ப்புடன் ஐந்தாண்டுக்கான மூலோபாய திட்டத்தை முன்வைத்துள்ளது. முதலீட்டு வசதிக்கான அபிவிருத்தி மற்றும் ஆசிய, பசுபிக் பொருளாதார நன்மைகள் எனும் தொனிப்பொருளின் கீழ் தாய்லாந்தில் அண்மையில் மாநாடு ஒன்று இடம்பெற்றது. இதன்போது ‘அந்த முதலீட்டு வசதி அளவுத்திட்டங்கள் மிகவும் முக்கியமானவை’ என்ற தொனிப்பொருளின் கீழ் உரையாற்றிய போதே இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த திட்டமானது குறிப்பிடத்தக்க உயர் மட்டங்களை […]
எரிவாயு தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது

லாஃப்ஸ் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்று (2) நாட்டை வந்தடையவுள்ளது. கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில், நாணய கடிதம் விடுவிக்கப்பட்டு மீண்டும் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கமைய, இன்றைய தினம் நாட்டை வந்தடையும் கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கப்பட்டதும், உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் சமையல் […]
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு ரஷ்யா அதிருப்தி

ரஷ்யாவின் ‘எரோஃப்ளோட்’ விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு ரஷ்யா அதிருப்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்தா அபேவிக்ரம லியனகே அந்த நாட்டின் வெளிவிகார அமைச்சுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்ய ‘எரோஃப்ளோட்’ விமானத்தின் சகல பயணிகளும் இன்றும், நாளையும் அந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என இலங்கையில் உள்ள ‘எரோஃப்ளோட்’ நிறுவனத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மொஸ்கோவ் நோக்கிப் பயணிக்கவுள்ள விமானங்களில் குறித்த பயணிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் […]
கடந்த வருடம் 382,506 , இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 282,506 வெளிநாட்டு கடவுச்சீட்டு

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 382,506 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன. எனினும், இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 282,506 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாட முன்வந்துள்ளமையே இதற்கான காரணம் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பியும் பண்டார தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டை […]
இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிக்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
இந்தியாவில் 16 இலட்சத்திற்கும் அதிகமான வட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகள் தடை

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. வட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கும் செயற்பாட்டைத் தடுப்பதற்காக, 16 இலட்சத்து 66 ஆயிரம் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் மாதாந்த அறிக்கையை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம், ஏனெனில், தீங்கு ஏற்பட்ட பின்னர் அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முன்னரே தடுப்பது மிகவும் சிறந்ததாகும் என […]