கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு

எரிபொருள், எரிவாயு பிரச்சினை நீடிக்கும் நிலையில் அரசாங்கம் நேற்று (01) விதித்த வரி காரணமாக பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இறக்குமதி பொருட்கள் மீதான வழமையான தீர்வை வரிக்கு மேலதிகமாக 100 வீத மிகை வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு நேற்று நடவடிக்கை எடுத்தது. அத்துடன், 4 வீதத்தால் VAT அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு கையடக்க தொலைபேசிகளின் விலையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் இன்று ஆராய்ந்தது. இதனடிப்படையில், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியொன்றின் விலை தற்போது […]

யோகட் – சீஸ் – திராட்சை – ஆப்பிள் குளிரூட்டிகளுக்கான வரி

2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பொருட்கள் வரிச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ்,நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக நேற்று முதல் (01) பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வியாபாரப் பொருட்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யோகட் இறக்குமதி மீது கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 1000 ரூபா விசேட வரி 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான சீஸ்களுக்கும் கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 400 ரூபா […]

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். வணிகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை காண்பது தொடர்பான கலந்துரையாடல், கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்றபோது ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் […]

இன்றுடன் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் நிறைவு

இன்றுடன் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 16,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் மாத்திரம் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு கொள்கலன் விற்பனை முகவர்கள் தொடர்பான விபரங்களை தமது இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளது. இதையடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை […]

பைகளின் விலைகளும் அதிகரிப்பு

பாடசாலை பைகள், தொழிலுக்கு கொண்டுசெல்லும் பைகள், வெளிநாட்டு பயணப் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயணப் பைகளின் விலைகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. உள்நாட்டு உற்பத்தி தட்டுப்பாடு மற்றும் கடந்த சில மாதங்களாக நிலவும் இறக்குமதி கட்டுப்பாடு என்பன இதற்குக் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பைகள் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலைகள் அதிகரித்தமையும் இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாகும் என உள்ளளூர் பைகள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அதிகரிக்க […]

வரலாறு காணாத விலை உயர்வு

பாகிஸ்தானில், சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விலை வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் ரூபாய் மதிப்பு கடந்த மாதம் முன் எப்போதும் இல்லாத வகையில் 7 சதவீதம் குறைந்தது. இது மேலும் கடும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதியம் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து கடனுதவி கேட்டு, பாக்., கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமையல் எண்ணெய் […]

கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிக கேள்வி நிலவுவதாகவும் நாளாந்தம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடவுச்சீட்டை வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஒரு நாள் சேவையினூடாக அதிகபட்சமாக 2,500 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சேவையை வழங்குவதன் ஊடாகவே அதிகபட்ச கடவுச்சீட்டுகளை விநியோகிக்க முடிகின்றது அதன் காரணமாக, […]