பொருளாதார நெருக்கடி, மட்பாண்ட கைத்தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரம் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்பாண்ட கைத்தொழிலிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் தமது வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழிலில் ஈடுபடுவோர் கவலை தெரிவித்துள்ளனர். மன்னாரில், நானாட்டான், மடுக்கரை, செம்மண் தீவு கருக்காய் குளம் உள்ளிட்ட பகுதிகளில் மட்பாண்ட கைத்தொழில் முன்னெடுக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக வர்த்தகர்கள் தங்களிடம் மட்பாண்டங்களை கொள்வனவு செய்வதில்லை என தெரிவித்துள்ளனர். தாம் தூர பிரதேசங்களுக்கு இந்த பொருட்களைக் கொண்டு சென்று வழங்குவதால் உற்பத்தி […]

மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 123.7 டொலராக காணப்பட்டது. டெக்சாஸ் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122. 17 டொலராக காணப்பட்டது. இது 13 வாரங்களில் பதிவான உச்சபட்ட விலை அதிகரிப்பாகும். 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 […]

சந்தைத் தொகுதியில் விலைமனு கோராமாலேயே 1321 கடைகள் வழங்கப்பட்டுள்ளன! (Video update)

புதிய மெனிங் சந்தை கட்டடத்தொகுதியில் 1,321 கடைகள் விலைமனு கோரப்படாமலேயே கொடுக்கப்பட்டுள்ளதாக அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக கோப் குழுவின் முன்னிலையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது. ஹம்பாந்தோட்டை ருஹுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்காக 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 75 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் ஆனால் அக்காலப்பகுதியில் […]

வடக்கில் அடகு வைக்கப்பட்ட 523 மில்லியன் ரூபா பெறுமதி நகைகளை மீட்க முடியாத நிலை

வடக்கில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் மோசடியினால் அடகு வைக்கப்பட்ட 523 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி கொண்ட நகைகளை மீட்க முடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பியான எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், வடக்கில் உள்ள நிதி நிறுவனம் ஒன்று மிகவும் மோசடியான முறையில் மக்களிடம் பணம் அறிவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்திடம் தனது […]

இராஜினாமா செய்தார் பசில்

தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். தமது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதன் மூலம் பொதுஜன பெரமுன கட்சியினூடாக பொருத்தமான ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார் 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய […]

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளை நுகர்வோர் அதிகாரசபை கைது செய்கிறது!

நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் இலங்கை நுகர்வோர் அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. அண்மையில் 12 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உள்ளூர் சந்தையில் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யப்பட்டதற்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், 1 கிலோகிராம் நாட்டு அரிசியின் விலை ரூபா 220/-, சம்பா அரிசி 1 கிலோகிராம் […]

யாழ்ப்பாணத்திற்கான ஒரு ரயில் பயணத்திற்கு ரூபாய் 3 இலட்சம் நஷ்டம்

ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறான பொதுவான கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால், பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், டீசல் விலை உயர்வால் ரயில் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு ரயிலை இயக்குவதற்கு எரிபொருளுக்காக 13 இலட்சம் ரூபா செலவாகும். இந்த […]