டொலர் கடன் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

யூரியா இறக்குமதி செய்வதற்காக இந்திய எக்ஸிம் வங்கியிடமிருந்து அமெரிக்க டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாதிடப்பட்டது. 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் இந்த கடன் வசதி கோரப்பட்டது. சிறுபோக பருவத்தில் யூரியா உரத்துக்கான உடனடி தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த கடனுதவி கோரப்பட்டது. இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, யூரியா உரம் கொள்வனவு செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்க இந்திய அரசு இணக்கம் […]

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 359.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 347.05 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம் , மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி குவைத் தினாரின் பெறுமதி 1,139.39 ரூபாவாக பதிவாகி உள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் […]

இலங்கைக்கான கடன், எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை

இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வழங்கப்படும் கடன் மற்றும் காலம் தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார். இலத்திரனியல் முறையில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இதற்காக எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்போது, குறித்த குழு கடன் முகாமைத்துவ திட்டம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தவுள்ளது. அத்துடன் இலங்கை அவ்வாறான […]

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்….

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜித ஹேரத் அறிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக விஜித ஹேரத் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பதவியேற்றார். இதற்கு முன்னர் அவர் இலங்கை மின்சார சபையின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

அரசாங்கத்தினால் இலவச உணவு வழங்க முடியும் – பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (9) மாலை இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் பணியாளர்கள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என தான் நம்புவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிலவும் […]

கடவுச்சீட்டுக்கான புகைப்பட மென்பொருள் செயலிழப்பு!

வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளதென படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும், படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு அந்த சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார். கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொதுமக்கள் வருவதால் ஏற்படும் நெரிசல் நிலையைக் குறைப்பதற்காக, புதிய […]

13ஆம் திகதி விசேட பொது விடுமுறை!

எதிர்வரும் திங்கட்கிழமை (13) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனியார் துறை மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com