ஸ்ரீலங்கன், துருக்கி வான் பரப்பில் நிகழவிருந்த பாரிய விபத்து

லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் (13) பயணத்தை மேற்கொண்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல் 504 என்ற விமானம் நேற்று பாரிய விபத்திலிருந்து தப்பியமை தொடர்பில் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று பிற்பகல் குறித்த விமானம் பாதுகாப்பாக இலங்கைவந்து தரையிறங்கியது. இந்த விமானம், 275 பயணிகளுடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. சுமார் 33,000 அடி உயரத்தில் குறித்த பறந்துகொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் ஏர்வேய்ஸூக்கு சொந்தமான விமானம் ஒன்று 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. […]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கடந்த வருட நட்டம் 45,000 மில்லியன்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் கடந்த வருடத்துக்கான தேறிய நட்டம் 45,674 மில்லியன் ரூபா என கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. அத்துடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இத்தகைய நட்டத்தை எதிர்நோக்கிய தருவாயிலும் கூட, உயர் முகாமைத்துவ அதிகாரி ஒருவருக்காக மாதாந்தம் 3.1 மில்லியன் ரூபாவை வேதனமாக செலுத்தியுள்ளனர். இந்தக் கொடுப்பனவுகளுக்கான நிதி, அமைச்சரவை பத்திரம் மற்றும் பொது நிதி ஊடாக வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கோப் குழு அவதானம் செலுத்தியுள்ளது. 2020 […]
இலங்கையின் உணவுப் பணவீக்கம் கடந்த மாதம் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன் முறையாக உணவுப் பொருட்களின் விலை அதிக அளவில் பதிவாகியுள்ளது. இதற்கமைய இலங்கையின் உத்தியோகபூர்வ உணவுப் பணவீக்கம் கடந்த மாதத்தில் 57.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2021 மே மாதம் முதல் இந்த வருடம் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் அதிகபட்சமாக 71 சதவீத அதிகரிப்பையும் கடந்த மாதத்தில் 13 சதவீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதாக உணவின் சில்லறை விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்காணிக்கும் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. […]
அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் மென் மதுபான அனுமதிப்பத்திரம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு மென் மதுபான அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை மேம்படுத்தவும், நாட்டிற்கு அதிக வெளிநாட்டு வருவாயை பெறுவதற்கும் இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இது வழிவகுக்கும் எனவும் இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த வெற்றி […]
நகர் பகுதிகளில் நுகர்வோருக்கு சிக்கல்!

கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் நுகர்வோர் தங்களது பிரதான உணவுகளை பெற்றுக் கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். 60 சதவீதமான உணவகங்கள் மூடப்பபட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பல இடங்களில் ஃப்ரைட் ரைஸ் மாத்திரம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சோறு பொதி ஒன்றுக்கான செலவு அதிகரித்துள்ளமையினால் உணவக உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. இதேவேளை, உணவகங்களில் சிறிய உணவுகளுக்கான விற்பனையும் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரச பணியாளர்கள் தங்களவு வீடுகளில் இருந்து […]
2.5% புதிய வரி இலங்கையில் அமுல்

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனைப் புரள்வு 120 மில்லியன்களை அதிகரிக்கும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 2.5% சதவீதத்தின் கீழ் புதிய வரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் […]
இலங்கைக்கு உதவ அமெரிக்கா இணக்கம்

இலங்கைக்கு உதவ அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கன் இணக்கம் வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதன் பிறகு முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் உறுதியளித்துள்ளார் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com ⏰ யாழில் […]