காங்கேசன்துறைக்கு புதிய நகர்சேர் கடுகதி

கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறைக்கு புதிய நகர்சேர் கடுகதி தொடருந்து சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண தொடருந்து நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண தொடருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாளைய தினத்திலிருந்து பிரதி வெள்ளிக்கிழமைகளில் கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறைக்கு இந்த இரவுநேர நகர்சேர் கடுகதி தொடருந்து, சேவையில் ஈடுபடவுள்ளது வெள்ளிக்கிழமைகளில் கல்கிஸையில் இரவு 10 மணிக்கு புறப்படும் குறித்த தொடருந்து, அடுத்தநாள் அதிகாலை 5.25க்கு யாழ்ப்பாணத்தை […]

வெளிநாடுகளில் அனுப்பப்படும் அந்நிய செலாவணி 34 சதவீதத்தினால் உயர்வு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களினால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி 34 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் அந்நிய செலாவணி 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் பதிவான 249 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி மே மாதத்தில் 304 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், முகவர் நிலையங்கள் ஊடாக 47 ஆயிரத்து 692 பேரும், சுயமாக 85 […]

அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு?

எதிர்வரும் நாட்களில் சந்தைகளில் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடுத் ஏற்படக் கூடும் என அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 6 ஆம் திகதி முதல் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது இதுவரை பயன்படுத்தப்பட்ட திறந்த கணக்கு அடிப்படையிலான முறையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அந்த முறைமை நிறுத்தப்பட்டதன் மூலம் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது டொலர் பெற்றுக் […]

அரிசி இறக்குமதிக்கான அவசியம் இருக்காது !

எதிர்வரும் பெரும்போகத்தில், நாட்டிற்கு விநியோகிப்பதற்கு தேவையான முழுமையான அரிசி அறுவடையின் ஊடாக கிடைக்கப்பெறுமாயின், அரிசியை இறக்குமதி செய்வதற்கான அவசியம் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சிறுபோகத்தில் கிடைக்கப்பெறும் அரிசையை களஞ்சியப்படுத்துவதற்காக, தற்போது களஞ்சியசாலைகளில் உள்ள அரிசியை சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு 40,000பெறுமதியான யூரியா உர மூடையொன்றை 10,000 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள […]

மீண்டும் முட்டை கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கோழி தீவகத்தில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ​விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,200 ரூபாயாகும். முட்டையொன்றின் விலை 47 ரூபாய் 50 சதத்துக்கு இன்றிலிருந்து விற்கப்படும் என்றும் அந்த சங்கம் அறிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் […]

தினசரி மின்வெட்டு 3 ஆண்டுகளுக்கு தொடரும் ?

நாட்டில் மின்சாரத்தின் தேவை விநியோகத்தை விட அதிகமாக இருந்தால், நாளாந்த மின்வெட்டு இன்னும் மூன்று வருடங்களுக்கு தொடரலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் (CEBEU) நேற்று (15) எச்சரித்துள்ளது. தினசரி மின் தடைகள் வழங்கல் மற்றும் தேவையைப் பொறுத்தது. மேலும் தேவை அதிகமாக இருந்தால், நாங்கள் மின் தடையை அமுல்படுத்த வேண்டும். எங்களுடைய மின் வழங்கும் திறன் சில வழிகளில் அதிகரிக்கும் வரை, இந்தப் பிரச்சனை தொடரும்” என்று CEBEU தலைவர் அனில் ரஞ்சித் […]

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366.50 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.70 ரூபாவாக பதிவாகியுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com