இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(21.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலையை மீள இயங்கச் செய்ய நடவடிக்கை

2012ஆம் ஆண்டு முதல் செயலிழந்துள்ள எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலையினை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அமைய முதலீட்டு நிறுவனம் ஒன்றுடன் அண்மையில் இலங்கை முதலீட்டு சபை ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் முதலாவது கட்டத்தின் போது ஒரு கோடியே 60 லட்சம் அமெரிக்க டொலர் நிதி முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் 2003 ஆம் ஆண்டு முற்றாக இடைநிறுத்தப்பட்டன. மீண்டும் […]

கட்டட நிர்மாணத்துறையில் பின்னடைவு!

இரும்பு, சீமெந்து உள்ளிட்ட கட்டட நிர்மாணப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக கட்டட நிர்மாணத் தொழிற்துறை பின்னடைவை சந்தித்துள்ளது. தமது தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், கட்டுமாணத் தொழிற்துறை ஈடுபடுபவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், மின்னியல் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட கட்டுமாணத் தொழிற்துறையுடன் தொடர்புடைய இலட்சக் கணக்கானகானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், சீமெந்து, இரும்பு, கருங்கல், அலுமினியம் உள்ளிட்ட கட்டட நிர்மாண பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளது. இதனால், பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் வகையில் […]

புதிதாக இடம்பெற்றுவரும் எரிபொருள் வர்த்தகம்

லங்கா ஐ.ஓ.சியினால் 50க்கும் மேற்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய கொள்கலன்கள் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நேற்று முன்தினமும் 23 கொள்கலன்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்பட்டதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது. இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத தற்போதைய சூழ்நிலையில், மற்றுமொரு எரிபொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வீடுகளுக்கே எரிபொருளை கொண்டு வரக்கூடிய வகையிலான வர்த்தகம் ஒன்று இடம்பெறுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் யூ.எஸ்.எஸ் […]

வெளிநாடுகளுக்கு செல்லும் வீட்டுப் பணிப்பெண்களின் வயதெல்லையில் திருத்தம்!

வீட்டு வேலைசார்ந்த பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பெண் பணியாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வீட்டுப்பணிப்பெண்களாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுபவர்களின் ஆகக்குறைந்த வயதெல்லை 25 வயதாகவும், மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆகக்குறைந்த வயதெல்லை 23 வயதாகவும் பிற நாடுகளுக்கு 21 வயதாகவும் காணப்பட்டது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் வயது எல்லையை திருத்துவது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்க நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு […]

யாழில் அரிசி தொடர்பில் இரு வாரங்களில் 41 வழக்குகள் தாக்கல்

யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் என்.விஜிதரன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் அரிசி கட்டுப்பாட்டு விலை மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் இன்றைய தினம் திங்கட்கிழமை கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டம் மாத்திரமல்ல இலங்கை பூராகவும் அரிசி கட்டுப்பாட்டு விலை தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. அமைச்சரவை […]

யாழ். சர்வதேச விமான நிலைய சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகை தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து […]