நாணயப் பரிவர்த்தனைகள் கண்காணிப்புக்கான புதிய முறைமை அறிமுகம்

விரிவான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் கண்காணிப்பு முறைமையை செயற்படுத்த புதிய தரவு சேகரிப்பு முறையை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. புள்ளிவிபரவியல் மற்றும் ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக மதிப்புமிக்க உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் பல அம்சங்களில் கொள்கை உருவாக்கத்திற்கு இது உதவும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]

மசகு எண்ணெய் விலை கணிசமான அளவு குறைவு

கடந்த வாரம் உலக சந்தையில் 120 அமெரிக்க டொலரை கடந்திருந்த மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, தற்போது ஓரளவு குறைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 115 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது. வார இறுதியில் 112 அமெரிக்க டொலராக காணப்பட்ட ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை மீண்டும் சிறிதளவு அதிகரித்திருக்கின்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]

அவுஸ்திரேலிய இலங்கைக்கு பணம் அனுப்பும் சேவை கட்டணம் நீக்கம்

அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பும் போது அறவிடப்படும் 6 அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை இந்த சலுகை வழங்கப்படவுள்ளது. நிலவும் பொருளாதார நெருக்கடியின் அழுத்தம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com […]

எரிவாயு இறக்குமதிக்காக 90 மில்லியன் டொலர்

நாட்டுக்கு 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். இதனூடாக எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இடைக்கால பாதீட்டில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் […]

சந்தையில் மேலும் சில பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் 160 கிராம் நிறைக் கொண்ட பற்பசையின் புதிய விலை 310 ரூபா […]

இலங்கைக்கு எதிராக ஹமில்டன் வங்கியினால் வழக்கு தாக்கல்

அடுத்த மாதம் 25 ஆம் திகதி முதிர்ச்சியடையும் பிணை முறிகளுக்கான கொடுப்பனவை செலுத்த தவறுகின்றமை தொடர்பில் பிணை முறிக்கு உரித்துடைய தரப்பு நிவ்யோர்க் பிராந்திய நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக செலுத்த முடியாது என மத்திய வங்கி அறிவித்திருந்து. இதற்கு எதிராக இலங்கையின் 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை முறிகளை கொண்டுள்ள ஹமில்டன் வங்கியினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த பிணை முறிகளின் 5.875 சதவீதத்தை […]

அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

அடுத்தவாரம் அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்ககை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த குழு ரஷ்யா தொடர்பாக கலந்துரையாடாமல், இலங்கை தொடர்பாக மட்டுமே கலந்துரையாடும். இவ்வாறு இலங்கைக்கு பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு அப்பால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வீழ்ச்சியடையும் வேகத்தை கட்டுப்படுத்தி […]