அரசாங்கம் வரும் வரை காத்திருக்கும் அமைச்சர்கள்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அமைச்சர்களுடன் இன்று கலந்துரையாடலை நடத்தினார். பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த அரசாங்கத்திடம் தமது பொறுப்புக்களை ஒப்படைக்கத் தயார் என கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர்கள் அனைவரும் கருத்து வெளியிட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]

லிட்ரோ எரிவாயு விலையில் மீண்டும் அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி லிட்ரோ 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,910 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 5 கிலோகிராம் மற்றும் 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்பதுடன் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com […]

இலங்கையின் கொந்தளிப்புக்கு ரஷ்யாவே காரணம், அமெரிக்கா!

உக்ரேனிய தானிய ஏற்றுமதி மீதான ரஷ்யாவின் கட்டுப்பாடு இலங்கையின் கொந்தளிப்புக்கு பங்களித்திருக்கலாம் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தநிலைமைய ஏனைய நெருக்கடிகளையும் தூண்டக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்பின் தாக்கம் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பதை காணமுடிகிறது. இலங்கையின் நிலைமைக்கும், அது பங்களித்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது, இது உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பால் கணிசமாக […]

யாழ்.-கிளிநொச்சி விஷேட ரயில் சேவை இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான உத்தியோகத்தர்களுக்கான விஷேட சேவை இன்று(11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களின் கோரிக்கைக்கமைய கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கும் இந்தச் சேவை மிகவும் வரப்பிரசாதமாகும். இச்சேவையை மாங்குளம் வரையிலோ வவுனியா வரையிலோ விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் […]

மொட்டு கட்சி மூன்றாக பிளவு?

கொழும்பு அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாகியுள்ள நிலையில், பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற குழு மூன்றாக பிளவு பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் பெரும்பாலான குழுவில் 40இற்கும் மேற்பட்டவர்கள் டலஸ் அழகப்பெரும தலைமையில் முன்னணிக் குழுவாக இணைந்துள்ளனர். மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுடன் இன்னுமொரு குழு செயற்படுவதுடன் இதில் சுமார் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதில் சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன உட்பட்டோர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இரு குழுக்களைத் […]

எரிவாயு சிலிண்டர்களை பெற மின் பட்டியல் அவசியம்

நாட்டை வந்தடைந்த 3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய, இன்றும், நாளையும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கும், நாளை மறுதினம் ஏனைய இடங்களுக்கும் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும் போது, கடந்த மே மாத மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும். இதன்மூலம் அதிகளவான எரிவாயு கொள்கலனை பதுக்கி வைக்கும் செயற்பாட்டை தவிர்க்க […]

கோட்டாபய 13ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்தது ஏன்.?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் திகதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி எடுத்ததாகவும், எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்ததன் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக கட்சித் தலைவர்கள் மத்தியில் தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 13ஆம் திகதி போயா தினத்தில் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது என்பதால் ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி பிரமாணம் செய்து அன்றைய தினமே புதிய அமைச்சரவையை நியமிக்க பிரதமர் […]