நெல் அறுவடை அழிவடையும் அபாயம்

நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு அடுத்த சில நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல் அறுவடைக்குத் தேவையான எரிபொருளின் அளவு உரிய முறையில் கணக்கிட்டு பெற்றோலிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை நெல் அறுவடை சரியான முறையில் அறுவடை செய்யப்படாவிட்டால் […]

ஆறு மாதங்களில் 4,37,382 கடவுச்சீட்டுகள் விநியோகம்!

நாடு முழுவதும் கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையில் 289 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த வருடத்தின் இறுதி ஆறு மாதங்களில் 4,37,382 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]

சென்ற மாதம் 27,937 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

கடந்த ஜூன் மாதம் 27,937 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையான, 18,083 பேர் சொந்த வழிகளில் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர். உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் 9,854 பேர் ஜூன் மாதத்தில் வெளிநாடு சென்றுள்ளனர். இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 56,179 என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது. இந்த வருடத்தில் இதுவரை […]

கோட்டாவின் விசா கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு பேரிடியாக, அவரது விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இந்தியாவின் இந்து ஆங்கில ஏடு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற கோட்டபய, 2019 தேர்தலுக்கு முன்னதாக, தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார். அவர் இலங்கையை விட்டு வெளியேற முயற்சித்துள்ள நிலையில், அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். எனினும், அமெரிக்கா அதனை நிராகரித்துள்ளது. இதேவேளை, 9ஆம் திகதி போராட்டங்களிற்கு சற்று முன்னதாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட […]

வான்வெளி பயணம் தடுப்பு – கடல்வழியாக வெளியேற கோட்டாபய முயற்சி (AFP News)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வானுார்தி தளத்தின் ஊடாக, நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏ.எஃப்.பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் நேற்றைய இரவைக் கழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்திற்கான வழியை தெளிவுபடுத்துவதாகவும் ஏற்கனவே அவர் உறுதியளித்துள்ளார். எனினும், தப்பிச்செல்லும் போது தமது சொந்த நாட்டிலேயே […]

பரபரப்பாகும் பாராளுமன்ற மூலமான ஜனாதிபதி தேர்வு

அரசியலமைப்பின் 40 ஆம் உறுப்புரையில் பிரகாரம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையானது 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தில் குறித்துரைக்கிறது. அரசியலமைப்பின் 38 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவியானது ஜவறிதாயிருக்கும் பட்சத்தில் இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும். அவ்வாறு வறிதாகின்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் நடத்தும் அதிகாரியாகச் செயல்படுகிறார், மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டால், […]

பாண் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு

இன்று (12) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாணின் புதிய விலை 190 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன தெரிவித்தார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் […]