யூரோ மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சம நிலையில்!

20 ஆண்டுகளில் முதன்முறையாக, யூரோ (EUU) மற்றும் அமெரிக்க டாலருக்கு இடையிலான மாற்று விகிதம் சமநிலையை எட்டியுள்ளது — அதாவது இரண்டு நாணயங்களும் ஒரே மதிப்புடையவை. செவ்வாயன்று யூரோ $1 ஐ எட்டியது, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 12% குறைந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட உயர் பணவீக்கம் மற்றும் எரிசக்தி வழங்கல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் தூண்டப்பட்ட கண்டத்தில் மந்தநிலை பற்றிய அச்சங்கள் ஏராளமாக உள்ளன. போருக்கு முன்னர் ரஷ்ய குழாய்கள் மூலம் […]
வான்படை விமானத்தில் நாட்டைவிட்டு வெளியேறினார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்றுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை 1.45 அளவில் இலங்கை வான்படைக்கு சொந்தமான அண்டோனோ 32 ரக விமானத்தில், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியுடன், அவரது பாரியாரும், அவர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பிபிசி, சி.என்.என், அல்ஜசீரா உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அமெரிக்கா […]
ஜனாதிபதி மாலைதீவை சென்றடைந்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று(13) அதிகாலை மாலைதீவை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று(13) அதிகாலை 1.45 மணியளவில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதி இன்று(13) அதிகாலை 3 மணியளவில் மாலைதீவின் தலைநகரான மாலே நகரை சென்றடைந்ததாக பிபிசி உலக சேவை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் அவரது மனைவி அயோமா ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Sri Lanka: President Gotabaya Rajapaksa […]
இன்றைய நாணிய மாற்று

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.368.30 ரூபாவாகவும் கொள்முதல் விலை ரூ. 356.95ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
ஜனாதிபதியாகும் கனவில் இருக்கும் ரணில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகுவதாக கூறியுள்ளார். ஆனால் முப்பது ஆண்டுகளாக ஜனாதிபதியாவதற்கு கனவு கண்டு கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என நான் நம்பவில்லை என சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் போராட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் உறுப்பினர்களுக்கும் அரசியல் தவைவர்களுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே சாணக்கியன் எம்.பி இதனை தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் […]
நெல் அறுவடை அழிவடையும் அபாயம்

நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு அடுத்த சில நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல் அறுவடைக்குத் தேவையான எரிபொருளின் அளவு உரிய முறையில் கணக்கிட்டு பெற்றோலிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை நெல் அறுவடை சரியான முறையில் அறுவடை செய்யப்படாவிட்டால் […]
ஆறு மாதங்களில் 4,37,382 கடவுச்சீட்டுகள் விநியோகம்!

நாடு முழுவதும் கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையில் 289 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த வருடத்தின் இறுதி ஆறு மாதங்களில் 4,37,382 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]