ஜனாதிபதி நாளை பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளார்: சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதத்தை நாளை (12) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் அரசாங்க விவகாரங்கள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் […]
சுமந்திரன் பிரதமராகுறார் விக்னேஸ்வரன் ஆதரவு!

புதியவர்கள் புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க போகின்றோம் என மக்கள் முன் வந்தால் அதனால் எந்த பயனும் கிடையாதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவிக்கும் போதே க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமரும், பிரதமர் செயலிழந்து போனால் அவருக்கு முடியாத போனால் ஒரு மாத காலத்திற்கு சபாநாயகர் பதவியை ஏற்று நடத்த […]
சர்வதேச சமுதாயம் இலங்கைக்கு உதவ வேண்டும் : சோனியா காந்தி

இலங்கைக்கு சர்வதேச சமுதாயம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து காங்கிரஸ் கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் உணவுப் பற்றாக்குறை, எரிபொருள், அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கை மக்களின் ஒருமைப்பாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வர வேண்டும். இலங்கை அரசு மற்றும் மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வழங்கும் […]
உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்தது

இன்று (11) உலகச் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பீப்பாய் பிரென்ட் எண்ணெயின் விலை 107.28 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 164.63 டொலராகவும் பதிவாகியுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 120 டொலரைத் தாண்டியிருந்தது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” […]
பங்குசந்தை திடீர் முன்னேற்றம்

இன்றைய(11.07) தினம் பங்கு சந்தை திடீர் ஏற்றத்தை காட்டியுள்ளது. 4.20 சதவீத ஏற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் அனைத்து பங்கு சுட்டெண் 7080.69 புள்ளிகளோடு ஆரம்பித்த 7378.00 எனும் புள்ளியில் நிறைவடைந்தது. இது ஒரு பாரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. கடந்த மாதம் 10 ஆம் திகதி 7900 ஆக காணப்பட்ட பங்குசந்தை அனைத்து பங்கு சுட்டெண் நிலையற்றதாக தொடர்ந்தது. படிப்படியாக வீழ்ச்சியடைந்து 7080.69 என கடந்த வெள்ளிக்கிழமை வீழ்ச்சி கண்ட நிலையில் இன்று இந்த முன்னேற்றம் […]
சிறு தேயிலை தோட்ட செயற்பாடுகள் பாதிப்பு

தற்போதைய நெருக்கடி நிலையில் சிறு தேயிலை தோட்ட செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 1883ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேயிலை ஏல விற்பனை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிப்படை தன்மையினை கொண்ட இந்த ஏல விற்பனை மூலம் தேயிலை தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள் சிறந்த பலனை பெற்றனர். இதன் காரணமாக குறிப்பாக தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை ஏற்றுமதியாளர்கள் தேயிலையின் பெறுமதி மற்றும் தரம் என்பன போன்ற முதல் தர தகவல்களை பெற முடிந்தது. எப்படியிருப்பினும், தற்போதைய ஸ்திரமற்ற பொருளாதார தன்மை […]
இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் உண்ணிப்பாக அவதானித்து வருவதாக அதன் பேச்சாளர் நபிலா மஸ்ராலி தெரிவித்துள்ளார். சகல அரசியல் கட்சிகளும், சமாதானத்துடனும், ஜனநாயக ரீதியிலுமான சட்டபூர்வமானதொரு அரச நிர்வாக மாற்றத்தை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அவர் தமது ட்விட்டர் கணக்கில் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையினை சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது சகல கட்சிகளின் தலைவர்களினதும் பொறுப்பாகும் என்பதை உணர்ந்தும் செயற்பட வேண்டும். அத்துடன் இலங்கைக்கு இயலுமான மேலதிக […]