கட்டணங்கள் அதிகரிக்கும், விமான சங்கம்

சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால், விமான டிக்கெட் விலை கணிசமாக உயரும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததும் இதற்கு ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டுகிறார். சில மாதங்களில் வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் வருவதால், விமான டிக்கெட் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். இதனிடையே, உலகின் பல நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் விமானங்கள் ரத்துசெய்யப்படுவது அதிகரிக்கும் என்று […]
எரிபொருள் விலைகளின் உண்மைக் கதை

எரிபொருள் விலைகள் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் சுங்க அதிகார சபை முன்வைத்த தரவுகளுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க வரி உட்பட அனைத்து வகையான எரிபொருட்களையும் 300 ரூபாவுக்கும் குறைவாக வழங்க முடியும் என்ற போதிலும், மண்ணெண்ணெய் தவிர்ந்த ஏனைய எரிபொருள் வகைகளை 470 ரூபாவிற்கு விற்பனை செய்வதன் மூலம் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டி வருவதாக சுங்கத் தகவல்கள் […]
வெளிநாடு செல்லும் பசிலின் முயற்சி முறியடிப்பு

வெளிநாட்டிற்கு செல்வற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, எதிர்ப்பிற்கு மத்தியில் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார். விமான நிலையத்திற்குள் பசில் ராஜபக்ஸ சென்ற போது, அங்கிருந்த பெருந்திரளான பயணிகள் தமது எதிர்ப்பை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர். குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் […]
தற்காலிக ஜனாதிபதியாக ரணில்..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 ஆம் திகதியிடப்பட்ட தனது பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையொப்பமிட்டதாகவும், அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரசியலமைப்பின் ஏற்பாட்டில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஜூலை 20 ஆம் […]
நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய! – கூறியது தவறு, சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நாட்டை விட்டு வெளியேறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சபாநாயகர் இதனைத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்முடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பு போராட்ட களத்தில் இருந்த மக்கள் ஜனாதிபதி மாளிகையையும் ஜனாதிபதி செயலகத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதேவேளை, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய […]
உலக பணவீக்க பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்துக்கு!

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர், பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹொங்கின் பணவீக்கச் சுட்டெண்ணுக்கமைய, இலங்கை ஒரு இடம் பின் நகர்ந்துள்ளது. ஸ்டீவ் ஹொங்கின் பணவீக்க விளக்கப்படம் உலகின் பல நாடுகளால், தங்கள் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் ஒரு அளவுகோலாகும். இந்தக் குறியீடு மாதந்தோறும் புதுப்பிக்கப்படும். இதுவரை புள்ளிப்பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலும், ஸிம்பாப்வே முதல் இடத்திலும் இருந்தது. ஸ்டீவ் ஹொங்கின் சமீபத்திய குறியீட்டின் படி, துருக்கி இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. புலத்தையும் நிலத்தையும் […]
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதில் முதலாவது வருடமே கடுமையான காலம் என்று அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட காணொளியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமக்கென உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்த ஒரே வீடு இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் தமது நுால்களாகும் என்று ரணில் தெரிவித்துள்ளார். போர்த்துகேயர் […]