கோட்டாவின் விசா கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பேரிடியாக, அவரது விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இந்தியாவின் இந்து ஆங்கில ஏடு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற கோட்டபய, 2019 தேர்தலுக்கு முன்னதாக, தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார். அவர் இலங்கையை விட்டு வெளியேற முயற்சித்துள்ள நிலையில், அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். எனினும், அமெரிக்கா அதனை நிராகரித்துள்ளது. இதேவேளை, 9ஆம் திகதி போராட்டங்களிற்கு சற்று முன்னதாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட […]
வான்வெளி பயணம் தடுப்பு – கடல்வழியாக வெளியேற கோட்டாபய முயற்சி (AFP News)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வானுார்தி தளத்தின் ஊடாக, நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏ.எஃப்.பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் நேற்றைய இரவைக் கழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்திற்கான வழியை தெளிவுபடுத்துவதாகவும் ஏற்கனவே அவர் உறுதியளித்துள்ளார். எனினும், தப்பிச்செல்லும் போது தமது சொந்த நாட்டிலேயே […]
பரபரப்பாகும் பாராளுமன்ற மூலமான ஜனாதிபதி தேர்வு

அரசியலமைப்பின் 40 ஆம் உறுப்புரையில் பிரகாரம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையானது 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தில் குறித்துரைக்கிறது. அரசியலமைப்பின் 38 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவியானது ஜவறிதாயிருக்கும் பட்சத்தில் இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும். அவ்வாறு வறிதாகின்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் நடத்தும் அதிகாரியாகச் செயல்படுகிறார், மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டால், […]
பாண் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு

இன்று (12) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாணின் புதிய விலை 190 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன தெரிவித்தார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் […]
விமான நிலைய அதிகாரிகள் கடமையிலிருந்து விலகினர்!

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் தமது சேவையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, அதிகாரிகள், சேவைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வழியை பயன்படுத்தி முன்னாள் அரசியல் பிரமுகர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இன்று அதிகாலை பெசில் ராஜபக்ஷ, கட்டுநாயக்கவின் […]
120,000 கொள்கலன்கள் இன்று சந்தைக்கு விநியோகம்!

சந்தைக்கு இன்றைய தினம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய தினமும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாளை முதல் ஏனைய இடங்களுக்கு எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும் போது, கடந்த மே மாத மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும். இதன்மூலம் அதிகளவான எரிவாயு […]
பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 என்ற திகதியிடப்பட்ட தனது பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையொப்பமிட்டதாகவும், அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரவிக்கின்றன. ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவர் அதனை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளிப்பார். இந்த கடிதம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கோட்டாபய ராஜபக்சவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையும் அறிவிப்பை நாளை வெளியிடுவார். நேற்று மதியம் […]