ரணிலின் 30 வருட கனவு நிறைவேறியது

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை சட்ட யாப்பு 37.1 பிரகாரம் நியமிக்கப்பட்டுளளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

ரூபவாகினி கூட்டுத்தாபனத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த போராட்டக்காரர்கள்

ஆர்வலர்களால் படையெடுக்கப்பட்ட தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல், ஆர்வலர்கள் தேசிய தொலைக்காட்சியில் நுழைந்து நேரடி செய்தி ஒளிபரப்பில் இணைந்தனர். ரூபவாஹினி கூட்டுத்தாபனம் முற்றுகை நாட்டின் தேசிய தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]

கொழும்பில் பதற்ற நிலை! சரமாரியாக துப்பாக்கிச்சூடு

கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர […]

பதில் ஜனாதிபதியாக கோட்டாபயவால் ரணில் நியமனம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” […]

கொழும்பு; நான்குபேருடன் புறப்பட்ட அன்டொனோவ் விமானம்

கொழும்பு விமானநிலையத்திலிருந்து நான்கு பேருடன் புறப்பட தயாரான விமானத்திற்கு மாலைதீவில் தரையிறங்குவதற்கான அனுமதி கிடைக்காததால் சில மணிநேரம் குழப்பம் நிலவியதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது. ஏ.எவ்.பி மேலும் தெரிவித்துள்ளதாவது. கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட அன்டொனோவ் 32 விமானத்தில் 73 வயது கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவியும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் காணப்பட்டனர் என குடிவரவுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர் அவர்களது கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் விசேட விமானப்படை விமானத்தில் ஏறினார்கள் என இந்த நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்த குடிவரவுதுறை அதிகாரியொருவர் […]

கோட்டா மாலைதீவு செல்ல விமானம் வழங்கினோம்: விமானப்படை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், மனைவியும் மாலைதீவு தப்பியோடியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாடு செல்ல தமது விமானத்தை வழங்கியதை இலங்கை விமானப்படை உறுதி செய்துள்ளது. ஜனாதிபதி, மனைவி, இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் மாலைதீவு செல்ல விமானமொன்றை வழங்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளையடுத்து, விமானம் வழங்கப்பட்டததாக விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு, பண்டார நாயக்க விமான நிலையத்தின் குடியேற்றம், சுங்கம் […]

யூரோ மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சம நிலையில்!

20 ஆண்டுகளில் முதன்முறையாக, யூரோ (EUU) மற்றும் அமெரிக்க டாலருக்கு இடையிலான மாற்று விகிதம் சமநிலையை எட்டியுள்ளது — அதாவது இரண்டு நாணயங்களும் ஒரே மதிப்புடையவை. செவ்வாயன்று யூரோ $1 ஐ எட்டியது, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 12% குறைந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட உயர் பணவீக்கம் மற்றும் எரிசக்தி வழங்கல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் தூண்டப்பட்ட கண்டத்தில் மந்தநிலை பற்றிய அச்சங்கள் ஏராளமாக உள்ளன. போருக்கு முன்னர் ரஷ்ய குழாய்கள் மூலம் […]