சேவைகளுக்கு நன்றிகளை தெரிவித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த சில நாட்களாக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் சேவைகளுக்காக தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறிய புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தனது வாகனத்தில் இருந்து இறங்கி பாராளுமன்றத்திற்கு வெளியே கடமையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை வீரர்களை சந்தித்தார். https://www.youtube.com/watch?v=6d1hmkmi4is இந்த சந்திப்பின் போது, கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தை பாதுகாத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நிலைநாட்டவும் […]
குறியீடு பெற்றவர்களை மீண்டும் பதிவு செய்யுமாறு கோரிக்கை

கணனியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்த பெரும்பாலானவர்களை மீண்டும் பதிவு செய்யுமாறு எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இன்று 1919 என்ற இலக்கத்தினூடாக குறுஞ்செய்தி மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு கதிரைதான் – ரணில் நடத்திய அரசியல் புரட்சி எங்கள் youtubeக்கு SUBSCRIBE பண்ணி ஆதரவு தாருங்கள் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் […]
பதவிநீக்கம் செய்யப்பட்ட கூட்டாளி தெரிவுசெய்யப்பட்டுள்ளார், நியூயோர்க் டைம்ஸ்

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் மாற்றத்தி;ற்கான குரல்கள் ஒலிக்கின்ற போதிலும் முன்னாள் ஜனாதிபதியுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ள ரணில்விக்கிரமசிங்கவை முன்னாள் ஜனாதிபதிக்கு பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளனர் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களால் கடந்த வாரம் ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோத்தபாய ராஜபக்சவிற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் புதன் கிழமை ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எனது வாழ்க்கைiயே இந்த நாடாளுமன்றம்தான்,இந்த கௌரவத்தை நாடாளுமன்றம் எனக்கு வழங்கியமை குறித்து நான் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன் […]
புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்துக்குள் வீட்டுக்கு அனுப்புவோம்

புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்துக்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நடத்தப்படும் போராட்டத்தை நசுக்க முயல்வதாகத் தெரிவித்த அவர்கள் படையினருக்கு தாம் பயப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். புதிய வடிவில் போராட்டம் தொடரப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]
மனித கடத்தல் செயற்பாட்டில் முன்னேறிய இலங்கை!

அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த மனித கடத்தல் அறிக்கையில் இலங்கை 2 ஆம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை ஆனால் அதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது. கொரோனா தொற்றின் மத்தியிலும் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை கருத்திற்கொண்டே, இந்த தரயுயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளில் சிறுவர் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல இலங்கை அதிகாரிகளின் விசாரணைகள் மற்றும் கடத்தல் விசாரணைகளை வலுப்படுத்த ஒரு […]
ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்துக்குரிய நாமல்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாமல் ராஜபக்ஸ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் கடினமான பணி உங்களுக்கு உள்ளது. எங்கள் தேசத்தை நீங்கள் முன்னோக்கி வழிநடத்தும் போது உன்னதமான மூன்று ரத்தினம் உங்களை ஆசீர்வதித்து வழிகாட்டட்டும் என நாமல் கூறியுள்ளார். இதனை நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் […]
நான் பெரிய பணக்காரன் அல்ல

பாராளுமன்றத்தில் தாம் ஆறு வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளவில்லை எனவும், தான் ஒரு பெரிய பணக்காரன் அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் இளைஞர்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உழைக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் மேலும் கேட்டுக் கொண்டார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய […]