யாழில் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம்

தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ் மாவட்டத்தில் இன்று முதல் (21) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளிற்கு 1500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2000 ரூபாவிற்கும், கார்/வான் மற்றும் இதர வாகனங்களுக்கு 7000 ரூபாவிற்கும் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது. வாகன பதிவு இலக்கத்தின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம்பெறும். செவ்வாய் , சனி – 0,1, 2 இலக்கத்திற்கும், […]
கடன்பெறுநர்களுக்கான சலுகைகள்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவலுடன் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவுமுகமாக 2020 மாச்சு தொடக்கம் இலங்கை மத்திய வங்கி பல சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டஇசைவு தாமதகாலம், கடன் மறுசீரமைப்பு/ மீள்அட்டவணைப்படுத்தல், கடன் அறவீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துதல், குறைந்த செலவில் மூலதனக் கடன்கள், சில வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களுக்காக கட்டணங்கள் மற்றும் அறவீடுகளைத் தள்ளுபடி செய்தல் போன்றவற்றை இச்சலுகைகள் உள்ளடக்குகின்றன. தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அத்துடன் சுற்றுலாத் துறை, போக்குவரத்து, தயாரித்தல், சேவைகள், […]
இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் விநியோகம் இல்லை

வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் இன்று முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். இதேவேளை, இன்றைய தினம் கொலன்னாவை மற்றும் முத்துராஜவலை பெற்றோலிய முனையங்களுக்கு 100க்கும் அதிகமாக எரிபொருள் தாங்கி ஊர்திகள் சென்றுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி சாந்த சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் […]
வெப்பத்தால் லண்டனில் தீ விபத்து!

லண்டனில் அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. ஐரோப்பாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் வாட்டி வரும் நிலையில் கிழக்கு லண்டனில் உள்ள டவர் பிளாக் அடுக்குமாடி கட்டிடத்தின் 17-ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன்போது உடனடியாக 25 தீயணைப்பு வாகனங்களில் சென்ற 125 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com […]
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு சீனா காரணம்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு சீனாவின் கண்மூடித்தனமான கடன்பொறியே காரணம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சீஐஏயின் தலைவர் பில் பேர்னஸ் (William J. Burns) , கொலராடோ மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது சுமத்தியுள்ளார். சிலங்கையின் இந்த நிலை மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவின் கடன் பொறியில் சிக்கியதன் காரணமாகவே இலங்கை இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள தாக தெரிவித்த அவர், சீனா […]
ரணில் பதவியேற்பில் மஹிந்த, மைத்திரி

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக “ரணில் விக்கிரமசிங்க” பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் கலந்து கொண்டனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
ரணில் ஜனாதிபதியாக வருவதை எதிர்பார்க்கவில்லை -நடிகை தமிதா

ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை இலங்கை மக்கள் எதிர்பார்க்கவில்லை என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியதன் மூலம், நாட்டின் பொது மக்கள் அபிப்பிராயம் முற்றாக வீதியில் வீசப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். போராட்டம் இத்துடன் முடிவடையாது என்றும், நாட்டுக்காக இறக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். காலி முகத் திடலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் […]