ஒரு லட்சம் எரிவாயு சிலிண்டர் விநியோகம்

இன்று 100,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் தற்போதுள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கான வரிசையை குறைக்க முடியும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் லிட்ரோ நிறுவனம் சுமார் 60,000 – 75,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுத்ததாகவும், 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் விரைவில் இலங்கையை வந்தடைய உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் […]
போதுமான எரிபொருள் இருப்புக்களை உறுதி செய்கிறது

அடுத்த 30 நாட்களுக்கு நாட்டில் போதுமான டீசல் இருப்புக்கள் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ( CPC) உறுதியளித்துள்ளது. இதேவேளை,நாட்டில் 22 நாட்களுக்கு போதுமான பெற்றோல் கையிருப்பு இருப்பதாக CPC தெரிவித்துள்ளது. நேற்று நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 4000 மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,000 மெட்ரிக் தொன் பெற்றோல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஒவ்வொரு வாகனத்தின் இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்திற்கேற்ப […]
காலி முகத்திடல் வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது!

தற்காலிகமாக மூடப்பட்ட காலி முகத்திடல் வீதி இலகுரக வாகனங்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக 100 நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தியதையடுத்து, அவரை பதவி விலகுமாறு கோரி அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டது. தடைகளை அகற்றும் பணி நேற்று இடம்பெற்றது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” […]
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் அடக்கம்

இந்தியாவில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாடசாலை விடுதியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரின் வீட்டை சென்றடைந்துள்ளது. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள பாடாசாலை விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இதனிடையே, கடந்த 13 ஆம் திகதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பாடசாலை நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் […]
வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கருத்துக்கள் – சீறிப் பாய்ந்த ரணில்!

வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்துள்ள ஜனாதிபதி தனது கரிசனைகளை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவநடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி இராஜதந்திரிகள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். உங்கள் நாடுகளில் ஜனாதிபதி அலுவலகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கு அனுமதிப்பீர்களா என […]
சைக்கிள் உதிரிப் பாகங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக நாட்டில் பலர் துவிச்சக்கர வண்டிகளுக்கு பழகி வருவதாகவும் இதன் காரணமாக உதிரிப் பாகங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துவிச்சக்கர வண்டி மீண்டும் பிரபலமடைந்து வருவதால் அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக ஹொரணை வர்த்தகர்கள் பலர் தெரிவித்துள்ளனர். ‘‘விற்பனை செய்ய முடியாமல் பல மாதங்களாக காட்சியறைகளில் இருந்த சைக்கிள்கள் இன்று அதிக கிராக்கியுடன் விற்கப்படுகின்றன. அத்தகைய தேவையால், 10,000-15,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட சைக்கிள்களை இன்று 80,000-95,000 ரூபாவுக்கு விற்கிறோம். அதில், டயர், […]
19 நாட்களில் இலங்கைக்கு 28,000 சுற்றுலா பயணிகள் வருகை

இவ்வாண்டில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28,733 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 440,110 ஆகும். குறித்த தரவுகள் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த ஆனால் நிலையானதாக இருப்பதைக் காட்டுகிறது, மேலும், நாட்டில் அரசியல் மற்றும் […]