ஐ.ம.சக்தியின் 8 எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகள்

எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அடுத்த பதினைந்து நாட்களில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாகச் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி […]
எரிபொருள் பெற போலி இலக்கத்தகடுகளைப் பயன்படுத்திய இருவர் கைது

இந்நாட்டில் பதிவு செய்யப்படாத இலக்கத்துடன் மோட்டார் சைக்கிளுக்கு எண்ணெய் கொள்வனவு செய்த நபரொருவரை அகுனகொலபலஸ்ஸ பொலிஸார் நேற்றுமுன்தினம் (23) கைது செய்துள்ளனர். அங்குனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞன் அங்குனகொலபலஸ்ஸவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இருந்து எரிபொருள் பெற்றுக்கொண்டதையடுத்து அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை சோதனையிட்டுள்ளனர். எரிபொருள் எடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கம் இந்த […]
நாட்டில் அரிசித் தட்டுப்பாடு இல்லை

அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த பெரும் போகம் வரை மக்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
ஓகஸ்ட் 1 வரை மட்டுமே இறுதி இலக்க முறைமை !

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR முறைமை நாளை (26) முதல் அமுலாகும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் வழங்கும் முறைமை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதிவரை தொடரும் என்றும் அதன் பிறகு முழுமையாக QR குறியீட்டு முறைமை மாத்திரம் அமுலாகும் என அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக QR முறைமையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என தகவல் மற்றும் […]
ரணிலை வாழ்த்திய புடின், வெளிப்படுத்திய ஆர்வம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரி இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வாழ்த்துக்களை அவர், ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான விருப்பத்தை, ரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கான வாழ்த்து செய்தியின் ஊடாக வெளியிட்டுள்ளார். […]
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதுகுறித்த ஆலோசனை கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை பாடசாலைகளை வழமை போன்று நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் இருந்து பாடசாலைகளை வழமை போன்று நடத்துவதற்கு உயர்ந்த பட்ச […]
முட்டை விலை மேலும் அதிகரிப்பு

முட்டை விலை மேலும் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தீவனங்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக, முட்டைகளுக்கான விலை அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் முட்டை பாவனையும் அதிகரித்துள்ளதுடன், எதிர்காலத்தில் முட்டையொன்றின் விலை 55 ரூபா வரை அதிகரிக்க கூடும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்டதுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் […]