வெளிநாட்டில் இருந்த கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்!

வெளிநாட்டில் இருந்த கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை போல நடிக்க முயன்ற மனைவி நிஜமாகவே உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய அனுத்தரா சிறிமான்ன என்ற பெண்ணே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.அனுத்தராவுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதோடு, கணவர் உதவியுடன் வீட்டின் பின்புறம் மற்றுமொரு அழகான வீட்டையும் கட்டியுள்ளார். புது வீட்டின் புதுமனை புகுவிழா எதிர்வரும் […]

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை.

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) சற்று குறைந்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 211,000 ரூபாவாக உள்ளது. 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 194,500 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் (03) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 212,000 ரூபாவாகவும், 22 […]

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விபரம்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 289.72 ரூபாவாகவும், 298.41 ரூபாவாகவும் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (03) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 289.07 ரூபாவாகவும் 297.64 ரூபாவாகவும் காணப்பட்டது. மத்திய கிழக்கு உட்பட ஏனைய […]

மீண்டும் தேங்காய் விலை அதிகரிப்பு!

இலங்கையின் தேங்காய் விலை 18.32 வீதம் அதிகரித்து, வாராந்த ஏலத்தில் தேங்காய் ஒன்றின் அதிகூடிய விலையைப் பதிவு செய்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. தேங்காய்களின் பற்றாக்குறை காரணமாகக் கடந்த ஒரு மாதமாக வாராந்த ஏலம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஏலத்தில் 109,615 ரூபாவாக இருந்த 1000 தேங்காய்களுக்கான விலை கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற ஏலத்தில் 129,699 ரூபாவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பங்காடிகள் தேங்காய் ஒன்று 174 ரூபாய் முதல் […]

தமிழ் இளைஞர் கனடாவில் பரிதாபமாக உயிரிழப்பு!

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று (04) தேவை நிமிர்ந்தம் வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இளைஞனின் மரணம் கனடா வாழ் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பா 2…இதுவரையில் 1760 கோடி வசூல்

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா 2. தமிழ்,ஹிந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப் படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப் படம் வெளியாகி 25 நாட்களுக்குள் 1760 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுவரையில் குறுகிய காலகட்டத்தில் அதிகம் வசூலித்த படங்களில் வரிசையில் புஷ்பா 2 திரைப்படம் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வாகனங்களை இறக்குமதிக்கு அனுமதியளித்தால் என்ன நடக்கும்..?

தற்போதைய சூழலில் வாகனங்களைக் கொள்வனவு செய்வது பொருத்தமற்றது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். கணேசமூர்த்தி தெரிவித்தார். சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் மிகப்பெரிய அளவில் டொலர் வெளிப்பாய்ச்சல் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.