இலங்கை சீனாவுடனான பேச்சுக்கள் கடினமாகவே இருக்கும்!

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அரசாங்கத்தை சிறப்பான முறையில் அமைப்பதுவே, இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான முக்கியமான முன்நிபந்தனை என்று சர்வதேச பொருளாதார குறிகாட்டியான ஃபிட்ச் தரப்படுத்தல் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயச் சபையின் நிதியுதவி மற்றும் உத்தியோகபூர்வ இருதரப்பு கடனாளர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு போன்றவற்றின் மூலம் இலங்கை தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்ற ஃபிட்ச் தரப்படுத்தலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி அதிக பெரும்பான்மையுடன் உறுதிப்படுத்தப்பட். அவரது அரசாங்கம் சில […]

இலங்கை கடன்: சீனா அமெரிக்காவுக்கும் அறிவுரை!

இலங்கைக்கு வழங்கிய கடன்களை சீனா நியாயப்படுத்தியுள்ளது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்பொழுதும் இலங்கையை வழிநடத்தும் கோட்பாட்டை பின்பற்றுவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார். அனைத்து ஒத்துழைப்பு திட்டங்களும் விஞ்ஞான திட்டமிடல் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவை எந்த அரசியல் விடயத்திலும் இணைக்கப்படவில்லை. அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அந்த கடன்கள் பங்களித்துள்ளதுடன் இலங்கை மக்களுக்கு உறுதியான நன்மைகளையும் கொண்டு வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் […]

சுற்றுலாத்துறையை பாதிக்கும் அவசரகால சட்ட நீடிப்பு

அவசரகாலச் சட்டத்தை ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான நாடாளுமன்றின் அங்கீகாரம், சுற்றுலாத்துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் என்ற அளவில் சுற்றுலாத்துறை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நாடாளுமன்றம் நேற்று அவசரகால சட்டத்தை ஒரு மாதத்துக்கு நீடிக்க அனுமதி வழங்கியமையானது, எதிர்மறையான விளைவைக் கொண்டு வரும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் நாட்டிற்கு சுற்றுலாத்துறையினரின் வருகை மேலும் குறையும். அத்துடன் சுற்றுலாவுக்கான விளம்பரங்களை கூட […]

இலங்கைக்கு உதவியளித்த இந்தியா உதவாத சீனா’ – விமர்சித்துள்ள அமெரிக்கா!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில் இந்தியா உண்மையில் விரைவாக நடவடிக்கை எடுத்தது எனினும் சீனா, இலங்கைக்கான நிவாரணங்கள் தொடர்பில் உரிய பதில்களை வழங்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. யுஎஸ்எய்ட் என்ற சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இன்று கருத்துரைத்த சமந்தா பவர், இலங்கைக்கு வெளிப்படையற்ற ஒளிபுகா(opaque loan) கடன்களை வழங்கியுள்ள சீனா, இலங்கைக்கு அதிக கடன்களை வழங்குனராக மாறியுள்ளது. […]

சீனாவுடன் பேச்சை ஆரம்பியுங்கள்! சர்வதேச நாணய நிதியம்!

இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை எதிர்பார்த்துள்ள நிலையிலேயே இந்த கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ளது. சீனா இலங்கையை பொறுத்தவரை பாரிய கடன் வழங்குநராக உள்ளது. எனவே மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை சீனாவுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் […]

இந்திய – இலங்கை வர்த்தகத்தில் வீழ்ச்சி நிலை

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து கீழ்நோக்கி செல்வதால், அண்டை நாடான இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டு வருகிறது இதனை இந்திய செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கைப் பங்காளிகளிடமிருந்து பணம் வராது என்ற அச்சத்தில் பல இந்திய ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இந்தியா இலங்கையின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும். மேலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் நாடுகளில் ஒன்றாகும். பெருகிவரும் இயல்புநிலை அபாயங்கள் காரணமாக இலங்கையின் கொள்வனவாளர்களிடம் இருந்து புதிய கட்டளைகளை […]

ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

ஈராக் – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அங்கு இருந்திருக்கவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்கள் பாக்தாத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடுருவியுள்ளனர். அங்கு தூதரகங்கள் உட்பட தலைநகரின் மிக முக்கியமான கட்டடங்கள் உள்ளன. பாதுகாப்புப் படையினர் ஆரம்பத்தில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதாகத் […]