இலங்கையில் வரலாறு காணாத பணவீக்கம்

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60.8% ஆக உயர்ந்துள்ளது. உணவு வகை பணவீக்கம் 90.9%ஆகவும் போக்குவரத்துக்கான பணவீக்கம் 143.6% ஆகவும் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. பணவீக்கம் 75 வீதமாக உயரக்கூடும்! 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான 12 மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் 60.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு வருட பண அச்சிடும் நடவடிக்கையின் பின்னர் நாணயத்தின் வீழ்ச்சிக் காரணமாகவே இந்த பணவீக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை […]
இலங்கையில் 45% ஹொட்டல் முன்பதிவுகளை இரத்து

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் போராட்டங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். இந்நிலைமை இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரசபை கூறுகிறது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக […]
QRக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதாது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் முச்சக்கர வண்டிக்கு வாரமொன்றுக்கு வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் போதுமானதாக இல்லை என பலாங்கொடை பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்கு ஏறக்குறைய மூன்று லீற்றர் பெற்றோல் தேவைப்படுவதாகவும், எரிபொருள் ஒதுக்கீட்டின் மூலம் வாரத்துக்கு அரசாங்கம் வழங்க திட்டமிட்டுள்ள ஐந்து லீற்றர் பெற்றோல் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அந்தளவு எரிபொருளை பெற்று ஒரு வாரத்துக்கு முச்சக்கர வண்டி சேவையைத் தொடர முடியாது […]
QR அமைப்பு முறை வெற்றிகரமாக உள்ளது-எரிசக்தி அமைச்சர்

நாடளாவிய ரீதியில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 962 நிலையங்கள் தற்போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருளை வழங்கும் முறையை பின்பற்றியுள்ளன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று (29) அதிகளவான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, 657 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அந்த முறைப்படி எரிபொருளை வழங்கியுள்ளன. நேற்றிரவு 8.30 வரை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்காக 4,651,911 வாகனங்கள் பதிவு […]
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார மோட்டார் கார்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் (Ideal Motors) நேற்று (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார் ´Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஒஸ்டின் மினி மொக் (Austin Mini Moke) காரைப் போன்றது. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளைப் பயன்படுத்தி அதிக திருப்திகரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தக் காருக்கு […]
இலங்கைக்கான அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தும் ஜப்பான்!

கடன்களை செலுத்தாததன் காரணமாக ஜப்பான், இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை வர்த்தக சம்மேளனம் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கும் ஒப்புதல் கிடைத்தால் மாத்திரமே, நிதி உதவியையும் வழங்குவதற்கு ஏனைய நாடுகள் முன்வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பிரதிநிதிகளை தமது சம்மேளனம் சந்தித்தபோது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் இல்லாமல் கணிசமான அளவு உதவிகளை தாம் […]
விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது

தேயிலை கொழுந்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதென சிறுதேயிலை தோட்ட உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், 100 முதல் 130 ரூபாவிற்கு இடைப்பட்ட அளவில் காணப்பட்ட தேயிலை கொழுந்தின் விலை, அமெரிக்க டொலருக்கு நிகராக அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் ஒரு கிலோ கிராம் தேயிலை கொழுந்தின் விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளது என சிறு தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் துஷார பிரியதர்சன தெரிவித்துள்ளார். தேயிலை துறைக்கு கிடைத்துள்ள இந்த இலாபமானது […]