இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பு 1.85 பில்லியன்!

2022, ஜூன் இறுதிக்குள் இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணிக் கையிருப்பு 1.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் கையிருப்பு 7.6 பில்லியன் டொலர்களாக இருந்தன. எனினும் அன்றில் இருந்து அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக கையிருப்பு வீழ்ச்சியடைந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னதாக கையிருப்பு 2020 இறுதிக்குள் 5.7 பில்லியன் டொலர்களாகக் குறைந்தது. மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, கையிருப்பு 2021 ஆம் ஆண்டின் […]

போதைக் குளிசைகள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு அனுப்பப்பட்ட 2,973 போதைக் குளிசைகள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதை குளிசைகளின் மொத்த பெறுமதி சுமார் 29.7 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த போதை குளிசைகள் நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

எரிபொருளை சேமித்து வைத்திருந்தவர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி, பாதுகாப்பற்ற முறையில், எரிபொருளை சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெயாங்கொடை – நயிவல பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் 71 லீற்றர் டீசலும், 105 லீற்றர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருந்த 24 பேர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிரும், 6,610 லீற்றர் டீசலும், 606 லீற்றர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் […]

962 நிரப்பு நிலையங்களில் QR முறைமை அமுலில்!

நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நேற்றைய தினம் QR குறியீட்டு முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்று 657 நிரப்பு நிலையங்களில் இந்த முறையை அமுலாக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி முதல் நேற்றிரவு 8.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 962 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமை நடைமுறையில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக […]

ஜனாதிபதி ஆசனத்திலிருந்து இலட்சினை நீக்கம்

நாடாளுமன்றில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தில், முதல் முறையாக ஜனாதிபதியின் இலட்சினை அகற்றப்பட்டுள்ளது. அந்த ஆசனத்திற்கு, அரச இலட்சினையைப் பொறிக்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். ஜனாதிபதியை விளிக்கும்போது, அதிமேதகு என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதையும், ஜனாதிபதியின் இலட்சினைக் கொடியைப் பயன்படுத்துவதையும் இரத்துச் செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இதற்கமைய, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார். 9ஆவது நாடாளுமன்றத்தின் 3ஆவது கூட்டத் தொடர், ஜனாதிபதி […]

யாழ். நகரிலிருந்து ஊர்காவற்றுறைக்குச் செல்ல 11 ஆயிரம் ரூபா கேட்ட ஆட்டோ சாரதி!

அண்மையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்ற பெண் ஒருவர் மாலை நேரமானதால் ஊர்காவற்றுறைக்கு செல்வதற்காக முச்சக்கரவண்டி ஓட்டுனரிடம் பேரம் பேசியுள்ளார். ஓட்டுனர் 11ஆயிரம் என்றதும் தலை சுற்றி விழாத குறையாக 1800 ரூபா கொடுத்து யாழ். மாட்டின் வீதிக்குச் சென்று உறவினர் வீட்டில் தங்கி மறுநாள் பஸ்ஸில் பயணித்துள்ளார். யாழ் நகரிலிருந்து ஊர்காவற்றுறைக்கு பஸ்ஸில் பயணிப்பதாயின் அரை மணி நேரமே எடுக்கும் எனக் கூறப்படுகிறது. இது இவ்வாறிருக்க முன்பு யாழ் நகருக்குள்ளே பயணிப்பதாயின் 3 […]

இலங்கை கால்நடை தீவனத்துக்கு கடுமையான தட்டுப்பாடு

பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி உற்பத்தி 12.1 சதவீதமும் குறைந்துள்ளன. கால்நடைத் தீவனத்தை முறையாக உற்பத்தி செய்யாமையே இந்த நிலைக்குக் காரணம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” […]