வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும், சுற்றுலா ஹோட்டல்களின் மின்சாரம் மற்றும் பிற தேவைகளுக்கும் எரிபொருளை வழங்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை […]

இனி நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

எரிவாயு விநியோகத்தை கட்டம் கட்டமாக வழமைக்கு கொண்டு வருவோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறதியை நிறைவேற்றியுள்ளோம். இனிவரும் நாட்களில் நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். எரிவாயு விநியோக கட்டமைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எரிவாயு விநியோகத்தை கட்டம் கட்டமாக வழமைக்கு கொண்டு வருவோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறதியை நிறைவேற்றுயள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த மாதம் […]

முச்சக்கர வண்டிக்கு வாரத்திற்கு 30 லிற்றர் பெற்றோல்

பொது போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 30 லீற்றர் பெற்றோல் வழங்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் எவ்வகையிலும் போதுமானதல்ல எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார் . ஏனைய பொதுப் போக்குவரத்து சேவைகளைப் போன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முச்சக்கரவண்டிகளையும் உள்வாங்க வேண்டும், இல்லையெனில் இலட்சக்கணக்கான முச்சக்கர வண்டி ஊழியர்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படுவார்கள் . பொதுப்போக்குவரத்தில் ஈடுபடாத முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு […]

IMF உடனான பேச்சுவார்த்தை தொடர்பில் அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் உடன்பாட்டை எட்டும் நோக்குடன் இலங்கை அதிகாரிகள் கடன் மறுசீரமைப்பு ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தை உள்ளடக்கி நிதி அமைச்சு இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளது. இலங்கையில் கடன் வழங்குநர்களுடன் முறையாகப் பணியை ஆரம்பிக்கும் முன்னர் கடன் நடவடிக்கைக்கான பகுப்பாய்வு […]

746 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளது

நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நேற்றைய தினம் QR குறியீட்டு முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, 746 நிரப்பு நிலையங்களில் இந்த முறையை அமுலாக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணிவரையான காலப்பகுதி வரையில் ஆயிரத்து 60 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR குறியீட்டு முறைமைக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் 902 நிரப்பு நிலையங்களிலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் 158 நிரப்பு நிலையங்களிலும், இவ்வாறு எரிபொருளை […]

எரிபொருளை பதுக்கி விற்பனை செய்த குற்றச்சாட்டு – 24 மணித்தியாலங்களில் 33 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமைக்காக 33 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. காவல்துறையினர் 31 இடங்களில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 1,108 லீட்டர் பெற்றோல் மற்றும் 1,441 லீட்டர் டீசல் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி விற்பனை செய்த குற்றச்சாட்டு – 24 மணித்தியாலங்களில் 33 […]

கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன

நிதி அமைச்சின் சுற்றறிக்கையின்படி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் மதுபான அனுமதிப்பத்திரங்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகின்றன. மதுவரி கட்டளைச் சட்டத்தின்படி சில நிபந்தனைகளின் கீழ் இந்த சுற்றுலா உணவகங்களுக்கு ஜூலை 28 முதல் மென்மையான மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உணவகங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவளிக்கும் உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கு, மதுபான உரிமங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த உரிமங்களுக்காக, வணிகங்களின் உரிமையாளர்கள் 25,000 ரூபாவை […]