இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்! உறுதியளித்துள்ள இந்தியா!

இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். கம்போடியாவில் இடம்பெற்று வரும் ஆசியான் மற்றும் இந்திய அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்ற சென்றுள்ள நிலையில் இன்று இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் அலி சாப்ரியை சந்தித்தபோதே ஜெய்சங்கர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். சீனாவின் விஞ்ஞான கப்பல் இலங்கைக்கு வரும் நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முறுகல்களை […]
பேருந்து கட்டணம் குறைப்பு!

நேற்று நள்ளிரவு முதல் சாதாரண பேருந்து பயண கட்டணம் 11.14 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 38 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட பேரூந்து கட்டணத்திலிருந்து, 10 சதவீதத்தினை குறைத்தல் மற்றும் அண்மையில் குறைக்கப்பட்ட டீசல் விலையைக் கருத்தில் கொண்டு பேருந்து பயண கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 350 வெவ்வேறு […]
இலங்கையில் போராட்டங்களை ஊக்குவிக்க விசாவைப் பயன்படுத்தியதாக குற்றம்

இலங்கையில் குடிவரவு அதிகாரிகளால் கடவுச்சீட்டு கைப்பற்றப்பட்ட ஸ்கொட்லாந்து பெண்ணுக்கு இங்கிலாந்து அரசு உதவிகளை முன்னெடுத்துள்ளது. இலங்கைக்கு பயணம் செய்ய வழங்கப்பட்ட விசாவை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி கெய்லி பிரேசரின் கடவுச்சீட்டை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது. மருத்துவ காரணங்களுக்காகவே பிரேசருக்கு இலங்கை வருவதற்கு விசா வழங்கப்பட்டது. எனினும் அவர் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஊக்குவிக்க விசாவைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து ஸ்கொட்லாந்து நகரான அபெர்டீனை தளமாகக் கொண்ட தொழிலாளர் […]
ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள்!

இலங்கையில் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இலங்கையில் 147,192 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்பட்டன. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் கடவுச்சீட்டு வழங்கல் 33% ஆல் அதிகரித்து 590,260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை ஜூலை மாதத்தில் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டுக்காக மொத்தம் 101,777 […]
புறக்கோட்டையில் அத்தியாவசிய பொருள் விலை குறைந்துள்ளது

பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளிட்ட பல பொருட்களின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பு 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை வரத்தக சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஜ.தேவபிரான் தெரிவித்துள்ளார். 330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின், மொத்த விலை 270 ரூபாவாகவும், 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் […]
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்- ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது. இந்த சந்திப்புக்கான அழைப்பை, ஜனாதிபதி விடுத்திருந்தார். எனினும் இந்த சந்திப்புக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட முன்னணி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றுமாறு காவல்துறை விடுத்த கோரிக்கைக்கு இணங்க சில கூடாரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் கூடாரங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக சிலர், நீதிமன்றத்தின் தலையீட்டை கோரியுள்ளனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் […]
நெல்லின் அதிகபட்ச விலை நிர்ணயம்

நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த ஆண்டு நெல் கொள்வனவுக்காக ஒரு கிலோ நெல்லுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. இதன்படி, நாட்டு நெல் ஒரு கிலோ 120 ரூபாவுக்கும், சம்பா மற்றும் பச்சையரிசி நெல் கிலோ ஒன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோ ஒன்று 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் . நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான பணத்தை பயன்படுத்தி நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]