ரணிலும் சஜித்தும் இணையும் யோசனை!

ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தரப்பில் இருந்தே இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பிலும் இது தற்போது வாதவிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை […]
இலங்கைக்கான கடனை நிறுத்திய சீனா!

இலங்கைக்கான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீன அரசுக்கு சொந்தமான எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான கடனுதவியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் நிறுத்தப்பட்டமையை அடுத்து கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள். அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அத்துடன் இந்த கடன் நிறுத்தல் காரணமாக சுமார் 2000 இலங்கையர்களி;ன் தொழில்களும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன. இலங்கையின் […]
மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும்!

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விளைச்சல்கள் சேதமடைந்துள்ளமையினால் எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலை 40 முதல் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தெரிவித்துள்ளது. மலைநாட்டு மரக்கறிகளின் விலை 60 முதல் 70 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்று அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஒரு கிலோகிராம் கரட் மொத்த விற்பனையின் கீழ் 260 ரூபா முதல் 290 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவா […]
சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நாளைய தினம் குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. லிற்றோ எரிவாயு நிறுவன தலைவரை கோடிட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 200 ரூபா அளவில் விலை குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நாளைய தினம், அமைச்சரவையில் இந்த விடயம் முன்மொழியப்பட்டு, விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்ற அடிப்படையில் தேனீர் மற்றும் உணவுப்பொதிகளின் விலையில் குறைப்பு மேற்கொள்ளப்படும் […]
இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் சீன கப்பல் விவகாரம்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு சீன தூதரகம் இன்னும் பதில் வழங்கவில்லை. பீஜிங்குடன் ஆலோசனை நடத்தி, பதில் தருவதாக சீனாவின் தூதுவர்,நேற்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது, அறிவித்துள்ளார். சீனாவின் இந்த உளவு கப்பல் அதன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்தியா கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையிலேயே இந்த நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் இந்த கப்பல் […]
200 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

திருகோணமலை – கிண்ணியாவில் முச்சக்கரவண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை எரிபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 200 லீற்றர் டீசலும், 100 லீற்றர் பெற்றோலும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் கிண்ணியா சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்களாவர். அவர்களை நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக கிண்ணியா காவல்துறை தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் […]
பிரதமர் தினேஷ் குணவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு விஜயம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்களை அவர் சந்தித்துள்ளார். கட்சித் தலைமையகத்திற்குச் செல்ல நேரம் ஒதுக்கியமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவிட்டுள்ளதுடன், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் கட்சி அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் […]