அரசாங்கத்தின் செலவு 479 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு!

2022 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் செலவீனம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் செலவு ரூ.2,796.44 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டது. எவ்வாறாயினும், நேற்று முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கத்தின் செலவீனம் 3,275.8 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்துக்கான ஒதுக்கீடு 13.4 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் […]

19 ஆயிரம் லீற்றர் டீசலை கடத்திய 4 பேர் கைது

ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து நான்கு பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக 19 ஆயிரம் லீற்றர் டீசல் தொகையை அம்பாறைக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

மசகு எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் மீள ஆரம்பம்

மசகு எண்ணெய் கப்பல் ஒன்று எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். அதன் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர […]

கட்டண உயர்வால் மின்பாவனை மேலும் குறையும்

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சார பாவனை 25 வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு காரணமாக 7 வீதமும் இந்த நாட்களில் வெப்பநிலை குறைந்துள்ளதால் 15 வீதமும் மின்பாவனை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் மின்சார பாவனை குறையும் என்று தெரிவித்துள்ளார் . புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி […]

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நெருக்கடி நிலையில் இலங்கை அரசு

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அவர்களின் கடந்த மாத சம்பளமும் மிகவும் சிரமப்பட்டு வழங்கப்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலைமைக்கு மத்தியில் நாட்டில் உள்ள ஏனைய நிறுவனங்களின் நிலை குறித்து புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை என அவர் தெரிவித்துள்ளார். சம்பளம் இல்லாமல் பணியாற்றக்கூடிய அமைச்சர்கள் இருக்கிறார்களா என ஊடகவியலாளர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு மூன்று பேர் […]

பெண்களுக்கு இரவு நேரப் பணியை அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம்

கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல்) 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் எண் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, இது பெண்களுக்கான இரவு நேர வேலை குறித்த பழமையான தடை சட்ட விதிகளை நீக்குகிறது. அந்நியச் செலாவணியை உருவாக்கும் பல்வேறு சேவைத் துறை தொழில்துறையினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மேற்படி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார திங்கட்கிழமை […]

அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையம் விரிவுபடுத்தப்படவுள்ளது – Newsfirst அவர்கள் கடந்த 10 நாட்களுக்குள் நாட்டுக்கு வந்தவர்களாவர் எனத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர்கள் இதுவரையில், பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் […]