யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் பெண்ணொருவர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்தனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரது உடமையில் இருந்து 2கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 242





