யாழில் சுவிஸ் வாழ் பாடசாலை நண்பனால் இரண்டுபட்ட குடும்பம் யாழில் தாயாரின் பாடசாலை நண்பரான , சுவிஸ் வாழ் நபரால் பெண்னின் பதின்ம வயது மாணவி கர்ப்பமான சம்பவம் அம்பலமானதால் , அரச உத்தியோகஸ்தரான தாயார் தற்கொலை முற்சி மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனை பிரிந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் அரச உத்தியோகஸ்தரே இந்த விபரீத முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் நகரை அண்மித்த பகுதியில் குறித்த அரச பெண் உத்தியோகஸ்தர், தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களிற்கு முன்னர், தனது சகோதரன் வெளிநாடு செல்வதற்காக , கணவருக்கு தெரியாது மனைவி, தன்னிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை சகோதரனுக்கு வெளிநாடு செல்ல கொடுத்து உதவியிருக்கின்றார்.
எனினும் சகோதரனின் வெளிநாட்டு பயணம் தோல்வியில் முடிந்ததால் , பணம் மற்றும் நகைகள் கொடுத்தமை கணவருக்கு தெரிவந்துள்ளது.
இதனையடுத்து ஏற்பட்ட தகராறில் குடும்பம் பிரிந்த நிலையில், பதின்ம வயது பெண்பிள்ளைகள் தாயாருடனே வசித்து வந்துள்ளனர். குடுபத்தை பிரிந்த போதும் தந்தை பிள்ளைகளுடன் தொடர்பை பேணி வந்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே சுவிஸ்வாழ் பாடசாலை நண்பரின் அறிமுகம் சமூக வலைத்தளத்தில் தாயாருக்கு கிடைத்துள்ளது. அதன் பின்னர் தாயகம் வந்த சுவிஸ் வாழ் நபர் , நண்பியையும் பிள்ளைகளையும் வெளிநாடு அழைத்து செல்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவர்களுடன் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக பதின்ம வயது மாணவி கர்ப்பமான நிலையில், சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தாய் மகளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்து கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தந்தைக்கு தெரிய வந்ததை அடுத்து மனைவியிடம் அது தொடர்பில் வினவிய போது அரச உத்தியோகஸ்தரான பெண் விபரீத முடிவெடுத்த நிலையில் , காப்பாற்றப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.





