திருகோணமலையில் வீதியில் சிக்கிய ஒரு தொகுதி கடவுச்சீட்டுக்கள்!

திருகோணமலை, புல்மோட்டை 13வது மைல்கல் பகுதியில் வீதியோரத்தில் கடவுச்சீட்டு தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கை விடப்பட்டிருந்த நிலையில் இலங்கையர்களுக்கு சொந்தமான 7 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புல்மோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று மதியம் இந்த கடவுச்சீட்டுகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கடவுச்சீட்டுகளை யாரோ இந்த இடத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதனை கைவிட்டு சென்ற நபர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்