சினேகன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்மக திறமை கொண்டவர் தான் சினேகன்.
இவர், பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1-ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
இதற்கிடையில், 2021ம் ஆண்டு ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சினேகன், அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கன்னிகா திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்து முடிந்தது. திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கன்னிகா தாயாகி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகன் அவருடைய மகள்கள் பிறந்தது முதல் அவர்களுக்கு பெயர் வைத்தது வரையிலான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சினேகனின் தந்தை இறந்து போனார். அவரின் நினைவு படத்தை வைக்கும் நிகழ்வு சினேகனின் ஊரில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதற்கிடையில் சினேகன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காணொளியை அவரின் மனைவி கன்னிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மகள்களுடன் பக்கத்து கட்டிலில் கன்னிகாக இருக்கும் காணொளியை பார்த்த இணையவாசிகள் குழந்தைகள் கவனம் என ஆறுதலான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.





