நேற்றையதினம் இரவு வேளையில் திருகோணமலை நகர்ப்பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியிலே புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருக்கின்றது.
அதேவேளை எதிர்வரும் 21ஆம் பெரும் கண்டனப் பேரணி ஒன்றை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டிருக்கின்றது.
இத்தகைய சூழ்நிலையில் இலங்கையில் நெருக்கடியை உருவாக்குவதற்காகவே அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகின்ற இாஜதந்திரிகள் அனைவருமே ஜனாதிபதி அநுரவை சந்திக்காமல் ரில்வின் சில்வாவை சந்திப்பதில் மும்மூரம் காட்டுகின்றனர். இதேவேளை பிரதமர் ஹரினியை சந்திப்பதிலும் இன்னொரு தரப்பு முக்கியத்துவம் காட்டுகின்றது.
அதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் பாரிய இழுபறி நிலை ஒன்று உருவாகியுள்ளதாகவும் அந்த மோதல் எந்த நிலையில் வெடிக்குமோ என்ற நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





