யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனுக்கு விளக்கமறியல்!

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று யாழ். கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊவா, பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மேற்படி மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிகிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்திய வேளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்வம் தொடர்பான மேலதிக விசாராணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்