வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பில் இந்தச் சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொத்துவில் பொலிஸ் நிலையம்: 063 2248022
பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591168
Post Views: 8





