யாழில் வினையில் முடிந்த விளையாட்டு, பலியான குடும்பஸ்தர்

தற்கொலை செய்யப்பதாவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஜெ.சுரேந்தன் (வயது 33) என்பவரே இவ்வாறு நேற்று(14) உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த எட்டாம் திகதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பின்னர் கதிரையில் அமர்ந்திருந்து கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்போவகாக மனைவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்த வேளை கைபேசியில் உரையாடியவாறே கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மதுபோதையில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அதனை தொடர்ந்து, சகோதரன் அவரது கழுத்தில் இருந்த கயிற்றினை கழற்றி விட்டு கீழே உறங்க வைத்துள்ளார்.

எனினும், சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்