தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு, கையூட்டல் பெற்றிருப்பது தொடர்பில் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் பருத்தித்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடி தொடர்பான கணக்காய்வு அறிக்கை என்னிடம் உள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கின் நான்கு வைத்தியர்களிடம் இலஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
10 வேலைத்திட்டங்கள் வடக்கு மாகாண சபையின் அனுமதியின்றி வைத்தியர் கேதீஷ்வரனால் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
Post Views: 452





