யாழ் – அச்சுவேலியில் தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிள் செலுத்தும் பொலிஸார்!

யாழ்ப்பாணம்- அச்சுவேலி பொலிஸார், கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த சம்பவம் இன்றையதினம்(7)இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், நிலாவரை சந்தியில் இருந்து அச்சுவேலி பக்கமாக, மோட்டார் சைக்கிளில் இரண்டு பொலிஸார் பயணித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

வாகனங்களில் பயணிக்கும்போது கைபேசி பாவனையில் ஈடுபடுவது என்பது சட்டத்திற்கு முரணான விடயமாகும்.

மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய பொலிஸாரே பாதுகாப்பற்ற முறையில் கைபேசியில் உரையாடியவாறு பயணித்தமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் பொலிஸாருக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்