யாழ்ப்பாணத்தில் (Jaffna) கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.
யாழ்ப்பாண காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தீடீர் சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேரும் பகுதி பகுதியாக ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் எழு பேரும் என ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post Views: 347





